ஆட்டோமொபைல்
ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-08-07 10:01 GMT   |   Update On 2020-08-07 10:01 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பிரெஞ்சு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ரெனால்ட் விரைவில் டஸ்டர் மாடலின் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

ரெனால்ட் டஸ்டர் புதிய வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த என்ஜினை ரெனால்ட் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 



ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த காரின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

புதிய 1.3 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 153 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக சிவிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News