ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எஸ் கிராஸ்

வெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்த மாருதி சுசுகி எஸ் கிராஸ்

Published On 2020-08-04 13:11 GMT   |   Update On 2020-08-04 13:11 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் வெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்தடைந்து உள்ளது.


மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் கார் விற்பனையகங்களுக்கு வர துவங்கி விட்டது. இந்தியாவில் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் நாளை (ஆகஸ்ட் 5) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

இந்திய சந்தையில் புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 



முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ளதை போன்று எஸ் கிராஸ் மாடலிலும் சுசுகியின் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. முதன்முதலில் இந்த என்ஜின் சியாஸ் மாடலில் வழங்கப்பட்டது. இது 105 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News