ஆட்டோமொபைல்
கியா கார்

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா மோட்டார்ஸ்

Published On 2020-08-01 12:52 GMT   |   Update On 2020-08-01 12:52 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் விற்பனையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 

இத்தகைய மைல்கல் விற்பனையை அதிவேகமாக எட்டிய வாகன உற்பத்தியாளராக கியா மோட்டார்ஸ் இருக்கிறது. இந்திய சந்தையில் 11 மாதங்களுக்கு முன் அறிமுகமான கியா மோட்டார்ஸ் தற்சமயம் செல்டோஸ் மற்றும் கார்னிவல் என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 



இந்நிலையில், மூன்றாவதாக கியா சொனெட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் கியா மோட்டார்ஸ் தற்சமயம் ஈடுபட்டு உள்ளது. கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. செல்டோஸ் மாடல் கூர்மையான, ஸ்போர்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. 

இது இந்திய சந்தையில் மிக வேகமாக அதிக வாடிக்கையாளர்களை ஈட்டியது. பின் பல்வேறு காலக்கட்டங்களில் செல்டோஸ் அதிகம் விற்பனையான மாடலாக இடம்பிடித்தது.
Tags:    

Similar News