ஆட்டோமொபைல்
ஸ்கோடா என்யாக்

ஸ்கோடா என்யாக் ஐவி இன்டீரியர் விவரங்கள் வெளியீடு

Published On 2020-07-30 11:47 GMT   |   Update On 2020-07-30 11:47 GMT
ஸ்கோடா நிறுவனம் தனது என்யாக் ஐவி எலெக்ட்ரிக் மாடலின் இன்டீரியர் விவரங்களை வெளியிட்டு உள்ளது.
 

ஸ்கோடா நிறுவனம் தனது புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் மாடலின் இன்டீரியர் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இது ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். ஸ்கோடா என்யாக் ஐவி செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

புதிய ஸ்கோடா என்யாக் ஐவி மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐடி.3 ஹேட்ச்பேக் மாடலில் உள்ள அம்சங்களை பெற இருக்கிறது. இந்த கார் இன்டீரியர் அதிக காற்றோட்டம் நிறைந்த வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.



என்யாக் ஐவி மாடலில் 585 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கும் என்றும் 13 இன்ச் சென்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கொண்ட ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய மாடல் பின்புறம் கால் வைக்க போதுமான இடவசதி முந்தைய கோடியாக் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படும் என தெரிகிறது.

ஸ்கோடா என்யாக் மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. புதிய என்யாக் மாடல் 2022 ஆம் ஆண்டிற்குள் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடும் ஸ்கோடா நிறுவன திட்டத்தின் முதல் கார் ஆகும்.  

புதிய ஸ்கோடா என்யாக் மாடலில் 72kWh யூனிட் பேட்டரி வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News