ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி பலேனோ

புதிய என்ஜினுடன் சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி பலேனோ

Published On 2020-07-27 11:17 GMT   |   Update On 2020-07-27 11:17 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ மாடல் புதிய என்ஜினுடன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது.
 

மாருதி சுசுகி பலேனோ மாடல் இந்திய சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் வெவ்வேறு என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

தற்சமயம் சோதனை செய்யப்படும் பலேனோ மாடல் புதுவித என்ஜின் கொண்டிருக்கிறது. இது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே என்ஜின் ஆர்எஸ் வேரியண்ட்டில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



மாருதி சுசுகி பலேனோ ஆர்எஸ் மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் 102 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 அப்கிரேடு செய்யப்படாமல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.

எனினும், தற்சமயம் டர்போ பெட்ரோல் என்ஜின்களுக்கு கிடைக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் என்ஜினை திரும்ப கொண்டுவர மாருதி சுசுகி திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. புதிய புகை விதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்களும் பெட்ரோல் மாடல்களை மட்டும் விற்பனை செய்ய துவங்கி உள்ளன. 
Tags:    

Similar News