ஆட்டோமொபைல்
ஸ்கோடா ஆக்டேவியா ஸ்பை படம்

இணையத்தில் லீக் ஆன புதிய ஸ்கோடா கார் ஸ்பை படங்கள்

Published On 2020-07-25 10:13 GMT   |   Update On 2020-07-25 10:13 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஆக்டேவியா மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.


இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 2013 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் கணிசமான விற்பனையை பதிவு செய்து வரும் ஆக்டேவியா பிஎஸ்6 மாடல் இன்னும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாமல் இருக்கிறது.

முன்னதாக ஸ்கோடா ஆக்டேவியா மேம்பட்ட மாடல் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி உள்ளது. இந்நிலையில், ஸ்கோடா ஆக்டேவியா புதிய மாடல் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.



சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்தியாவில் இந்த கார் சோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். ஸ்பை படங்களின் படி புதிய ஆக்டேவியா மாடல் புதிய எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கிறது.

புதிய மாடலில் மெல்லிய ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முந்தைய மாடலில் இருந்த இடத்திலேயே புதிய மாடலிலும் ஃபாக் லேம்ப்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன் எல்இடி டெயில்-லைட்கள், புதிய 17 இன்ச் ரோடேர் ஏரோ அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா மேம்பட்ட மாடலில் 1.5 லிட்டர் டிஎஶ்ஐ என்ஜின், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை முறையே 148 பிஹெச்பி மற்றும் 188 பிஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டவை ஆகும். 
Tags:    

Similar News