ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார் ஸ்பை படம்

இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா தார் புதிய ஸ்பை படங்கள்

Published On 2020-07-24 14:57 IST   |   Update On 2020-07-24 14:57:00 IST
மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதமாகி வருகிறது. மஹிந்திரா தார் மாடல் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா தார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. 

ஏற்கனவே பலமுறை தார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியானது. மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஸ்பை படங்களில் மஹிந்திரா தார் வெள்ளை நிற பெயின்ட் செய்யப்பட்டு கருப்பு நிற ஹார்டு-டாப் கொண்டிருக்கிறது. இத்துடன் விங் மிரர்களை எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது. இத்துடன் புதிய தார் மாடல் பிளாக் ஃபென்டர் கிளாடிங், முன்புற பம்ப்பர் வடிவமைப்பும் புகைப்படங்களில் அம்பலமாகி இருக்கிறது.



புதிய தார் மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், ஏழு ஸ்லாட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இது பார்க்க ஜீப் ராங்ளர் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. ஹார்டு-டாப் மட்டுமின்றி புதிய தார் மாடல் சாஃப்ட்-டாப் வெர்ஷனும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது. 

மஹிந்திராவின் புதிய தார் மாடலில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டேலியன் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் எம்ஹாக் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது 140 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Similar News