ஆட்டோமொபைல்
நெக்சா

இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகளில் 11 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற நெக்சா பிராண்டு

Published On 2020-07-23 10:52 GMT   |   Update On 2020-07-23 10:52 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்கிய ஐந்து ஆண்டுகளில் 11 லட்சம் வாடிக்கையாளர்களை நெக்சா பிராண்டு பெற்று இருக்கிறது.
 

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் பிராண்டான நெக்சா இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிக வாகனங்களை நெக்சா பிராண்டு விற்பனை செய்து இருக்கிறது. 

இந்திய சந்தையில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமான நெக்சா பிராண்டு மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்சமயம் நெக்சா பிராண்டிங்கில் இக்னிஸ், பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6  போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 



நெக்சா விற்பனையகங்களை நவீனப்படுத்தவும், விற்பனை முறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் நெக்சா பிராண்டு திட்டமிட்டு இருக்கிறது. தற்சமயம் நாடு முழுக்க 200 நகரங்களில் சுமார் 350 விற்பனை மையங்களை நெக்சா கொண்டிருக்கிறது. 

விரைவில் நெக்சா பிராண்டு எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News