ஆட்டோமொபைல்
மும்பை பூனே எக்ஸ்பிரஸ்வே

எக்ஸ்பிரஸ்வே சாலையில் அப்படி சென்றால் ஆயிரம் அபராதம்

Published On 2020-07-21 15:33 IST   |   Update On 2020-07-21 15:33:00 IST
மும்பை பூனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் அப்படி சென்றால் ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மும்பை மற்றும் பூனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில நெடுஞ்சாலை பிரிவு காவல்துறை அறிவித்து உள்ளது. இந்த விதிமுறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.

மேலும் இந்த விதிமுறை அர்சி மற்றும் காலாபூர் இடையே உள்ள டோல்களில் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அர்சி மற்றும் காலாபூர் இடை 50 கிலோமீட்டர் சாலை ஆகும். மும்பை மற்றும் பூனே பகுதிகளை இணைக்கும் எக்ஸ்பிரஸ்வே சாலையில் இப்பகுதி அதிக சிறப்பானது என கூறப்படுகிறது.



இந்த பிரம்மாண்ட ஆறுவழி சாலை அடங்கிய நெடுஞ்சாலை அதிவேக வாகன ஓட்டிகளால் அபாயகரமான பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக அர்சி மற்றும் காலாபூர் இடையிலான பகுதிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல நெடுஞ்சாலை காவல்துறை அறிவித்து இருக்கிறது. 

இந்த வேகத்தில் செல்லும் வாகனங்கள் இரண்டு டோல்களை கடக்க 37 நிமிடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இரு டோல்களை 37 நிமிடங்களுக்குள் கடக்கும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

Similar News