ஆட்டோமொபைல்
டொயோட்டா

டொயோட்டா நிறுவன ஆலை பணிகள் விரைவில் துவக்கம்

Published On 2020-07-18 11:05 GMT   |   Update On 2020-07-18 11:05 GMT
டொயோட்டா நிறுவதனத்தின் பிடாடி உற்பத்தி ஆலை பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது பிடாடி ஆலை பணிகள் ஜூலை 20 ஆம் தேதி துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிடாடி ஆலை மூடப்பட்டது. 

தற்சமயம் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி ஆலை பணிகள் ஜூலை 20 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது. முந்தைய உத்தரவின் படி ஜூலை 14 ஆம் தேதி முதல் பிடாடி ஆலை பணிகளை டொயோட்டா நிறுவனம் நிறுத்தியது. 



ஜூலை 15 வரை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன ஊழியர்களில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. முன்னதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஏழு பேர் குணமாகி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் டொயோட்டா ஆலையில் 40 முதல் 45 சதவீத ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர் என டொயோட்டா தெரிவித்துள்ளது. மேலும் ஆலை முழுக்க சுத்தப்படுத்தும் பணிகள் அவ்வப்போது நடைபெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News