ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி வேகன் ஆர்

இந்திய சந்தை காம்பேக்ட் ஹேட்ச்பேக் பிரிவில் இந்த கார் தான் முன்னணி

Published On 2020-07-13 07:54 GMT   |   Update On 2020-07-13 07:54 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடல்கள் பிரிவில் இந்த கார் தான் முன்னணியில் உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் ஜூன் 2020 மாதத்தில் மட்டும் 6972 வேகன் ஆர் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது ஜூன் மாதத்தில் சந்தையின் ஹேட்ச்பேக் மாடல்கள் விற்பனையில் வேகன் ஆர் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது. 

சந்தையில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையில் காம்பேக்ட் ஹேட்ச்பேக் பிரிவு விற்பனை வேகமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் 25962 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதில் மாருதி சுசுகி வேகன் ஆர் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



இதைத் தொடர்ந்து மாருதி சுசுகி செலரியோ மற்றும் டாடா டியாகோ மாடல்கள் முறை இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. இரு மாடல்களும் முறையே 4145 மற்றும் 4069 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இதே மாதம் கடந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் 10228 வேகன் ஆர் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. வேகன் ஆர் மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர் 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன், சின்ஜி வேரியண்ட் 58 பிஹெச்பி, 78 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் சிஎன்ஜி ஆப்ஷன் 1.0 லிட்டர் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News