ஆட்டோமொபைல்
கியா கேஎக்ஸ்3

சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி

Published On 2020-06-20 11:52 GMT   |   Update On 2020-06-20 11:52 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.



கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் களமிறங்கியது. இந்நிறுவனத்தின் முதல் மாடலாக கியா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்றது. அறிமுகமான மிக குறைந்த காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படும் மாடல்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
 


இந்நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புகிய செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

முதற்கட்டமாக செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி சீன சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. சீனாவை தொடர்ந்து இந்த கார் மற்ற சந்தைகளிலும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் கியா எலெக்ட்ரிக் கார் கியா கேஎக்ஸ்3 இவி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த காரில் 45.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 11 பிஹெச்பி பவர், 285 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News