ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 ஸ்பை படம்

இணையத்தில் லீக் ஆன ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஸ்பை படங்கள்

Published On 2020-06-20 07:24 GMT   |   Update On 2020-06-20 07:24 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.



ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்நிலையில், புதிய எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

ஸ்பை படங்களின் படி புதிய ஐடி.4 மாடல் தோற்றத்தில் ஐடி.3 ஹேட்ச்பேக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனம் 4592எம்எம் நீளமாகவும், 1852எம்எம் அகலம் மற்றும் 1629எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2765எம்எம் அளவில் இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலின் பின்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரியர்-வீல் மோட்டார் 200 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ரியர்-வீல் மோட்டாரை தொடர்ந்து விரைவில் முன்புற மோட்டார் கொண்ட ஆல்-வீல் டிரைவ் வெர்ஷனை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



டூயல் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் போது, இந்த கார் 302 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஐடி.4 பல்வேறு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் 83kWh யூனிட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது 30 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்திடும் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி பற்றிய புதிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Tags:    

Similar News