ஆட்டோமொபைல்
டொயோட்டா

கர்நாடகத்தில் மீண்டும் மூடப்பட்ட டொயோட்டா உற்பத்தி ஆலை

Published On 2020-06-19 12:13 GMT   |   Update On 2020-06-19 12:17 GMT
கர்நாடக மாநிலத்தில் இயங்கி வந்த டொயோட்டா நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது.



கர்நாடக மாநிலத்தின் பிடாடி பகுதியில் இயங்கி வரும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது. இந்த ஆலையில் பணியாற்றி வந்த இரு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் ஜூன் 7 மற்றும் ஜூன் 16 ஆகிய தேதிகளில் கடைசியாக பணியாற்றினர். முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து டொயோட்டா மட்டுமின்றி மற்ற நிறுவன ஆலைகளும் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சில நிறுவனங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் மீண்டும் இயங்க துவங்கின. எனினும், பணிகளை துவங்கிய நிறுவனங்களில் சமூக இடைவெளி மற்றும் இதர பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியது.

முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் டொயோட்டா நிறுவன ஊழியர்களுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News