ஆட்டோமொபைல்
ஹோண்டா பிஆர் வி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கார்களை ரீகால் செய்யும் ஹோண்டா

Published On 2020-06-14 16:59 IST   |   Update On 2020-06-14 16:59:00 IST
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது கார் மாடல்களை ரீகால் செய்ய இருக்கிறது.



ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக கோளாறு உறுதி செய்யப்பட்ட மாடல்களை திரும்ப அழைக்க ஹோண்டா கார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி சுமார் பல்வேறு மாடல்களை சேர்ந்த சுமார் 65 ஆயிரம் யூனிட்களில் கோளாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை திரும்ப அழைத்து கோளாறை சரி செய்யும் பணிகளில் ஹோண்டா கார்ஸ் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.



2018 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார்களில் எரிபொருள் கலனில் இருந்து என்ஜினுக்கு எரிபொருளை பம்ப் செய்யும் இம்பெல்லர் பாகத்தில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கார் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சினை ஏற்படுலாம்.

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின்படி காம்பேக்ட் செடான் மாடலான அமேஸ் 32498 யூனிட்களும், 16434 சிட்டி யூனிட்களும், 7500 ஜாஸ் யூனிட்களும், 7057 WR-V யூனிட்களும், 1622 BR-V யூனிட்களும், 360 ப்ரியோ யூனிட்களும், 180 CR-V யூனிட்களும் இந்தியாவில் திரும்ப பெறப்படுகின்றன.

Similar News