ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்யுவி500

இணையத்தில் லீக் ஆன எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்

Published On 2020-06-06 16:57 IST   |   Update On 2020-06-06 16:57:00 IST
மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
 


நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய கார் ஸ்பை படங்கள் சென்னை அருகே சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.



ஸ்பை படங்களின் படி புதிய கார் பார்க்க ப்ரோடெக்ஷன் மாடல் போன்றே காட்சியளிக்கிறது. காரின் பின்புறம் தற்காலிக டெயில் லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தற்போதைய மாடலில் உள்ள 2.2 லிட்டர் யூனிட்டை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இவைதவிர புதிய எக்ஸ்யுவி500 மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Similar News