ஆட்டோமொபைல்
ஸ்கோடா கரோக்

உள்நாட்டு உற்பத்திக்கு தயாராகும் ஸ்கோடா கார்

Published On 2020-06-05 11:59 GMT   |   Update On 2020-06-05 11:59 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் எஸ்யுவி மாடல் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



ஸ்கோடா நிறுவனம் கரோக் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா கரோக் மாடலின் துவக்க விலை ரூ. 24.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிபியு (கம்ப்லீட்லி பில்ட் யூனிட்) முறையில் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக 1000 யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஸ்கோடா இந்தியா இயக்குனர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கரோக் மாடலை உள்நாட்டில் அசெம்பில் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.



ஸ்கோடா கரோக் மாடலை இந்தியாவில் அசெம்பில் செய்வதற்கான ஆயத்த பணிகள் மட்டுமே துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் காருக்கு கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்ப இதுபற்றிய முடிவு இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

புதிய ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய கரோக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

ஸ்கோடா நிறுவனம் புதிய கரோக் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய கரோக் மாடலில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News