ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் காப்புரிமை படம்

இணையத்தில் லீக் ஆன ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள்

Published On 2020-06-03 12:52 GMT   |   Update On 2020-06-03 12:52 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



ஹோண்டா சிட்டி மாடல் காரை தழுவி உருவாகி இருக்கும் ஹேட்ச்பேக் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. புதிய காரின் ப்ரோடோடைப் மாடல் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இதே காரின் காப்புரிமை படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

புதிய கார் சிட்டி பிராண்டிங்கில் வெளியாகுமா அல்லது முற்றிலும் புதிய பெயர் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும், இது தற்சமயம் தாய்லாந்தில் சோதனை செய்யப்படும் ஏழாம் தலைமுறை சிட்டி செடான் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. ஏழாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



முன்னதாக ஹோண்டா நிறுவனம் ஆறாம் தலைமுறை சிட்டி மாடலை தழுவிய ஹேட்ச்பேக் காரினை ஜியெனா எனும் பெயரில் சீன சந்தையில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. தற்போதைய மாடல் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹேட்ச்பேக் காரில் ஹோண்டாவின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் சில நாடுகளுக்கும், சில நாடுகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News