ஆட்டோமொபைல்
டாடா கிராவிடாஸ்

இணையத்தில் லீக் ஆன டாடா கிராவிடாஸ் ஸ்பை படங்கள்

Published On 2020-05-26 11:09 GMT   |   Update On 2020-05-26 11:09 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



டாடா கிராவிடாஸ் மாடல் கார் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நாடு முழுக்க ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து காரின் சோதனை துவங்கியுள்ளது.

ஸ்பை படங்களின் படி புதிய காரில் 6 ஸ்போக் ஸ்டீல் வீல்களை கொண்டிருக்கின்றன. இந்தியாவில் டாடா கிராவிடாஸ் மாடல் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலகட்டத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக மற்ற வாகனங்களை போன்று கிராவிடாஸ் மாடலின் வெளியீடும் தாமதமாகியுள்ளது.



தற்போதைய விவரங்களின் படி மூன்றடக்கு இருக்கை கொண்ட எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலகட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஹேரியர் எஸ்யுவி மாடலை தழுவி உருவாகியுளஅள கிராவிடாஸ் எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய கிராவிடாஸ் எஸ்யுவி மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News