ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார்

மஹிந்திரா தார் பி.எஸ்.6 புதிய ஸ்பை படங்கள்

Published On 2020-01-09 16:27 GMT   |   Update On 2020-01-09 16:27 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் தார் பி.எஸ்.6 புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட தார் பி.எஸ்.6 காரின் வெளிப்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதிய தார் எஸ்.யு.வி. கார் தற்சமயம் விற்பனையில் உள்ள மாடல்களை விட அளவில் பெரியதாக இருக்கின்றன. மேலும் இதன் உள்புறத்தில் புதிய மிதக்கும் வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படலாம்.



மேலும் இந்த காரில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இதில் இரண்டு அனலாக் டையல்கள், மத்தியில் MID, முழு ஆட்டோமேடிக் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் யூனிட், மடிக்கக்கூடிய கீ ஃபாப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மஹிந்திராவின் புத்தம் புதிய தார் எஸ்.யு.வி. மாடலில் புதிய 2.0 லிட்டர், பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜினின் செயல்திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

புதிய காரின் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இரண்டு ஏர்பேக்குகளை ஸ்டான்டர்டு அம்சங்களாக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: drivespark
Tags:    

Similar News