ஆட்டோமொபைல்
வால்வோ எக்ஸ்.சி.60

இந்தியாவில் சோதனை செய்யப்படும் வால்வோ எக்ஸ்.சி.60 பி.எஸ்.6

Published On 2020-01-03 11:26 GMT   |   Update On 2020-01-03 11:26 GMT
வால்வோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



வால்வோ நிறுவனத்தின் 2020 எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

ஸ்பை படங்களின் படி புதிய காரின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் டி5 இன்ஸ்க்ரிப்ஷன் டீசல் வேரியண்ட் என தெரிகிறது. அந்த வகையில் எக்ஸ்.சி.60 கார் இரண்டு வேரியண்ட்களில் வெளியாக இருக்கிறது. மற்றொரு மாடல் டி4 மொமண்ட்டம் டீசல் வேரியண்ட் ஆகும்.

தற்சமயம் விற்பனையாகும் வால்வோ எக்ஸ்.சி.60 பி.எஸ்.4 மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 235 பி.ஹெச்.பி. பவர், 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டி4 மொமண்ட்டம் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. பி.எஸ்.6 அப்கிரேடு காரணமாக புதிய காரின் செயல்திறன் அளவுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய வால்வோ எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்ட்டில் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே யூனிட், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் அறிமுகமானதும் வால்வோ எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 மாடல்கள் ஆடி கியூ5, பி.எம்.டபுள்யூ. எக்ஸ்3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ., லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News