ஆட்டோமொபைல்
எம்.ஜி. ஹெக்டார்

எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் புதிய ஸ்பை படங்கள்

Published On 2019-12-31 10:24 GMT   |   Update On 2019-12-31 10:24 GMT
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.



எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய படங்களில் காரின் உள்புற அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஹெக்டார் பிளஸ் காரில் இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே இடம்பெற்று இருக்கின்றன.

மேலும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் கூடுதலாக சீட் பெல்ட்கள் இடம்பெற்றுள்ளது. சோதனை செய்யப்படும் கார் மூலம் தயாரிப்பு மாடலில் கேப்டன் சீட்கள் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

முந்தைய ஸ்பை படங்களில் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் காரின் முன்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட முன்புற பம்ப்பர், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், புதிய வடிவமைப்பு கொண்ட பின்புற பம்ப்பர், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.




புதிய எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மாடலில் 2.0 டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 169 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

டீசல் என்ஜின் தவிர புதிய காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் வெளியானதும் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மாடல் டாடா ஹெக்சா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.

தற்சமயம் எம்.ஜி. ஹெக்டார் காரின் விலை ரூ. 12.48 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெக்டார் பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

புகைப்படம் நன்றி: Gagan Choudhary
Tags:    

Similar News