ஆட்டோமொபைல்
ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது

Published On 2019-12-10 10:28 GMT   |   Update On 2019-12-10 10:28 GMT
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்படுகிறது.



தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது வாகனங்கள் விலையை ஜனவரி 2020 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்து இருந்தன.

தற்சமயம் வரை வாகனங்கள் விலை எத்தனை சதவீதம் உயரும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும் என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களின் மாடல் மற்றும் வெர்ஷனுக்கு ஏற்ப அவற்றின் விலையில் ரூ. 2000 வரை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

இதேபோன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தனது வாகனங்கள் விலையில் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News