ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500

புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 ஸ்பை படங்கள்

Published On 2019-12-03 11:27 GMT   |   Update On 2019-12-03 11:27 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.500 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மஹிந்திரா நிறுவனத்தின் 2020 எக்ஸ்.யு.வி.500 கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் எக்ஸ்.யு.வி.500 கார் முழுமையாக மறைக்கப்பட்டு, பி.எஸ். 6 சோதனை உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. 

ஸ்பை படங்களின் படி புதிய கார் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. அந்தவகையில் முன்புறம் ஆறு செங்குத்தான ஸ்லேட்கள் கொண்ட புதிய கிரில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் முழுமைபெறாத ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.



இத்துடன் ஆடம்பர கார் கதவுகளில் வழங்கப்படுவதை போன்ற கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் புதிய ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் மற்றும் ஆடியோ கண்ட்ரோல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய எஸ்.யு.வி. மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் எம்.ஐ.டி., பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புதிய காரில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த கார் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியானதும் இந்த கார் டாடா கிராவிடாஸ் மற்றும் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எம்.ஜி. ஹெக்டார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

புகைப்படம் நன்றி: Lemon Green Studios
Tags:    

Similar News