ஆட்டோமொபைல்
டாடா டியாகோ

டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள்

Published On 2019-11-22 10:28 GMT   |   Update On 2019-11-22 10:28 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்பை படங்களின் படி டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப் மற்றும் அகலமான சென்ட்ரல் ஏர் டேம் வழங்கப்படுகிறது. இந்த காரில் பகலில் எரியும் எல்.இ.டி. மின்விளக்குகள் காணப்படவில்லை.

எனினும், உற்பத்தி செய்யப்படும் போது இவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் பின்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது.



புதிய காரில் தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினின் பி.எஸ். 6 வெர்ஷன் செயல்திறன் அளிவில் மாற்றம் இருக்காது.

இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும். புதிய ஹேட்ச்பேக் மாடலிலும் இதே டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கலாம்.

தற்சமயம் விற்பனையாகும் டாடா டியாகோ காரின் விலை ரூ. 4.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: GaadiWaadi
Tags:    

Similar News