ஆட்டோமொபைல்
ரெனால்ட் டஸ்டர்

இணையத்தில் லீக் ஆன ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6 ஸ்பை படங்கள்

Published On 2019-11-21 12:29 GMT   |   Update On 2019-11-21 12:29 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



2020 ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களில் புதிய டஸ்டர் கார் பி.எஸ். 6 ரக என்ஜின் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

புதிய 2020 ரெனால்ட் டஸ்டர் கார் பார்க்க தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. சர்வதேச சந்தையில் இரண்டாம் தலைமுறை டஸ்டர் மாடல் முற்றிலும் வித்தியாசமான தோற்றம் பெற்றிருக்கிறது.



இந்தியாவில் இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், புதிய காரின் வெளியீடு பற்றி ரெனால்ட் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. புதிய டஸ்டர் கார் 2020 பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த கார் பெட்ரோல் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. ரெனால்ட் இந்தியா நிறுவனம் பி.எஸ். 6 விதிகள் அமலாகும் போது டீசல் வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. எனினும், ரெனால்ட் பல்வேறு பெட்ரோல் மாடல்களை விற்பனை செய்ய இருக்கிறது.

தற்போதைய மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் 2020 ரெனால்ட் டஸ்டர் மாடல்களின் ஒரு வேரியணட்டில் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும் டஸ்டர் மாடலின் இரு என்ஜின்களும் புதிய காரில் வழங்கப்படலாம்.

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News