ஆட்டோமொபைல்
ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்

சோதனையில் சிக்கிய பி.எஸ். 6 க்விட் ஃபேஸ்லிஃப்ட்

Published On 2019-11-20 10:59 GMT   |   Update On 2019-11-20 10:59 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் பி.எஸ். 6 ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் பி.எஸ். 6 கார் பூனேவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் காரின் மத்தியில் பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் சோதனை செய்யப்படும் க்விட் கிளைம்பர் மாடலில் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்று 14 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை செய்யப்படும் காரின் பின்புறம் புகையை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கிறது.



வீடியோவின் படி புதிய 2020 ரெனால்ட் க்விட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் தற்போதைய க்விட் ஹேட்ச்பேக் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

ஸ்பை படங்களின் படி 2020 க்விட் மாடலில் புதிய வடிவமைப்பில் உருவான பம்ப்பர் வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. அதன் படி புதிய க்விட் மாடலில் புதிய பம்ப்பர், முன்புறம் புதிய ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை ரூ. 2.83 லட்சத்தில் துவங்கி ரூ. 4.92 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2020 ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை ரூ. 3.25 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: Area of Interest
Tags:    

Similar News