ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ராஸ்

மீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்

Published On 2019-11-16 10:58 GMT   |   Update On 2019-11-16 10:58 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரை ஜெனீவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தியது. ஏற்கனவே இந்த காரின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகின. புதிய ஸ்பை படங்களில் காரின் தோற்றம் ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலை போன்றே இருக்கிறது.

புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஷார்க் நோஸ் போன்ற முன்புறமும், ரேக்கெட் ஹணிகொம்ப் மெஷ் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ராஸ் பம்ப்பரில் ஃபாக் லேம்ப்கள், கீழ்புறம் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டுள்ளது. டாடாவின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது.



புதிய அல்ட்ராஸ் மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஜிட்டல் மல்டி-இன்ஃபோ டிஸ்ப்ளே, குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் மற்றும் சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம் போன்றவை வழங்கப்படுகிறது.

அல்ட்ராஸ் காரில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் ஏற்கனவே டியாகோ மற்றும் நெக்சான் கார்களில் வழங்கப்பட்டிருக்கிறது. 

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறனும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 98 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜன் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: ZigWheels
Tags:    

Similar News