ஆட்டோமொபைல்
எம்.ஜி. டி90

இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்

Published On 2019-11-15 10:28 GMT   |   Update On 2019-11-15 10:28 GMT
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



சீன ஆட்டோமொபைல் நிறுவனமான எம்.ஜி. மோட்டார் ரீ-பிராண்டு செய்யப்பட்ட டி90 எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதிய எம்.ஜி. டி90 மேக்சஸ் டி60 பிக்கப் டிரக் வாகனத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பை படங்களின் படி புதிய டி90 காரில் இன்வெர்ட் செய்யப்பட்ட ஹெக்சாகோனல் முன்புற கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஃபாக் லேம்ப் கிளஸ்டர், மல்டி-ஸ்போக் அலாய் வீல், பின்புறம் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.



எம்.ஜி. டி90 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இவை முறையே 223 பி.ஹெச்.பி. பவர், 360 என்.எம். டார்க் மற்றும் 175 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம்.

காரின் உள்புறத்தில் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, பானரோமிக் சன்ரூஃப், 3-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு எம்.ஜி. டி90 மாடலில் ஏ.பி.எஸ். இ.பி.டி., ஹில் அசிஸ்ட் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு லாக், ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, ஜியோ ஃபென்சிங் போன்ற வசதிகள் வழங்கப்படலாம்.

புகைப்படம் நன்றி: Team-BHP
Tags:    

Similar News