ஆட்டோமொபைல்
மாருதி எஸ் கிராஸ்

மாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படங்கள்

Published On 2019-11-07 10:41 GMT   |   Update On 2019-11-07 10:41 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரம் செலுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மாருதி நிறுவனம் எஸ் கிராஸ் கிராஸ்-ஓவர் ஹேட்ச்பேக் மாடலை 1.6 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பை படங்களில் எஸ் கிராஸ் மாடலில் கார் வெளியிடும் புகையை சோதிக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புறம் 1.6 பேட்ஜ் கொண்டிருக்கிறது. இதனால் இந்த கார் 1.6 லிட்டர் என்ஜினுடன் வரும் என உறுதியாகி இருக்கிறது.



மாருதி சுசுகி எஸ் கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் வெளியாகும் போது மாருதி நிறுவனம் தனது 1.6 லிட்டர் டீசல் DDiS 320 என்ஜினுக்கு மாற்றாக 1.3 லிட்டர் DDiS 200 என்ஜினை அறிமுகம் செய்தது. எனினும், மாருதி நிறுவனம் 1.3 லிட்டர் டீசலை என்ஜின் பயன்பாட்டை நிறுத்துவிடுவதாக அறிவித்துள்ளது. 

பி.எஸ். 6 விதிகள் அமலான பின் டீசல் என்ஜின் மீதான மோகம் அதிகரிக்கும் பட்சத்தில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பி.எஸ். 6 தரத்தில் வழங்கும் பணிகளில் ஈடுபடும் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: Gaadiwaadi
Tags:    

Similar News