ஆட்டோமொபைல்
கே.டி.எம். 250 அட்வென்ச்சர்

தீவிர சோதனையில் கே.டி.எம். அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்

Published On 2019-10-24 10:59 GMT   |   Update On 2019-10-24 10:59 GMT
கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் புதிய மோட்டார்சைக்கிள் ஹாலோஜென் ஹெட்லைட் கொண்டிருக்கிறது. இது பார்க்க டியூக் 250 போன்றே தெரிகிறது.

ஹெட்லைட் உடன் ஹெட்லைட் மாஸ்க் மற்றும் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஸ்பை படங்களில் உள்ள மோட்டார்சைக்கிளில் விண்ட்ஸ்கிரீன் காணப்படவில்லை.

ஹாலோஜென் ஹெட்லைட்கள் தவிர கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடல் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் கார்பன் காப்பி போன்று இருக்கும் என தெரிகிறது. இதன் முன்புறம் 19-இன்ச் வீல், பின்புறம் 17-இன்ச் வீல், ஃபியூயல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள், ஒற்றை கிராப் ரெயில் வழங்கப்படுகிறது.



புதிய ஸ்பை படங்களில் 250 அட்வென்ச்சர் மாடலில் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலிலும் டியூக் 250 மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இறுக்கும் என தெரிகிறது.

திறனை பொருத்தவரை கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலில் 248.8 சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 2.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புகைப்படம் நன்றி: BikeDekho
Tags:    

Similar News