weekly rasipalan 09.11.2025 to 15.11.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- கன்னி தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம்.
- துலாம் சீரான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.
மேஷம்
வெற்றி மேல் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் 3,6ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். தைரியம் வெற்றியைத் தரும். உடல் நலம் வைத்தியத்தில் சீராகும். கடன் பெற்று வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது பற்றி திட்டமிடுவீர்கள்.பத்திரப் பதிவு சுமூகமாகும்.சொத்துக்களின் மதிப்பு உயரும்.இழப்புகளை ஈடு செய்யக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நல்ல முறையில் நடக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். பெண்களுக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு, மரியாதை உயரும். விலை உயர்ந்த ஆபரணங்களை கவ னமாக பாதுகாக்க வேண்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.வெற்றி மேல் வெற்றி உண்டாக விநாயகரை வழிபடவும்.
ரிஷபம்
மகிழ்ச்சியும் மனபலமும் கூடும் வாரம். ராசிக்கு செவ்வாய் மற்றும் வக்ர புதனின் பார்வை உள்ளது.இதுவரை உங்களை சூழ்ந்திருந்த வெறுமை அகலும். மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கப் போகிறது. காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.வருமானப் பற்றாக்குறைகள் அகலும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். பிரமாண்டமான வீடு, வாகனம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறக்கும்.பொருள் வரவு அதிகமாகும். வாராக்கடன் வசூலாகும்.இனிமை தரும் இடமாற்றங்களை சந்திப்பீர்கள். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்வுப் பேச்சுக்கள் முடிவாகும். தடைபட்ட பத்திரப் பதிவுகள் நடக்கும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கூடிவரும்.
மிதுனம்
திட்டமிட்டு வெற்றி பெற வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதனும் 6,11-ம் அதிபதி செவ்வாயும் இருப்பது சற்று ஏற்ற இறக்கமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய சூழல் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறைய துவங்கும். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. வைத்தியம் பலன் தரும். நோய் தாக்கம் குறையும். கூட்டுத் தொழிலில் இருப்ப வர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்திற்கு வரன் அமையும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சித்தப்பா, மூத்த சகோதர, சகோதரி உதவியால் சில நல்ல காரியங்கள் நடக்கும்.போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தினமும் கந்த சஷ்டிகவசம் கேட்கவும்.
கடகம்
முன்னேற்றமான வாரம்.ராசியில் அதிசார குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார்.நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லோரும் பாராட்டக் கூடிய நல்ல புண்ணிய காரியம் செய்வீர்கள். தொழில் மூலம் நல்ல பலன்கள் தேடிவரும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் இணைவார்கள். கடக ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். திருமணம் கூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் போகிறது. அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்த வர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். அடமானத்தில் இருந்த நகைகள்,சொத்துக்கள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ராகு/கேதுக்களின் சஞ்சாரத்தால் சிறு மன சஞ்சலம் இருக்கும்.திருமண முயற்சி வெற்றி தரும்.சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும்.ஆரோக்கியம் சீராகும். தீர்த்த யாத்திரை சென்று வருவதன் மூலம் ஆன்ம பலம் பெருகும்.
சிம்மம்
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார்.சிம்ம ராசிக்கு மிகப் பெரிய யோகமாகும். கடந்த சில மாதங்களாக பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. சுகமும், சந்தோஷமும் அதிகரிக்கும். வெளியில் சொல்ல முடியாமல் இருந்த துக்கங்களும் துயரங்களும் விலகும்.வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் சீராகும்.கடன் பிரச்சினை குறையும்.தந்தையின் அனுசரணை கூடும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள், வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றில் சாதகமான முடிவு வரும். புத்தி சாதுர்யமான பேச்சுக்களால் காரியம் சாதிப்பீர்கள். சம்பள பாக்கிகள் வந்து சேரும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.எதிரிகளை வெல்லும் வலிமை ஏற்படும்.படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். கோபுர தரிசனம் செய்வதால் கோடி புண்ணியம் உண்டாகும்.
கன்னி
தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம். குரு லாப ஸ்தானத்தில் அதி சாரமாக வக்கிரகதியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெ றுகிறது. உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத வீடு, வாகனம் போன்ற சுப செலவு மிகுதியாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். மனத் தடுமாற்றம் நீங்கி காரியசித்தி உண்டாகும். புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். மனம் இலகுவாக இருக்கும். முகப் பொலிவு உண்டாகும்.பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.விரும்பிய கடன் தொகையை அரசுடைமை வங்கிகளில் பெறுவது உத்தமம். மந்தமாக இருக்கும் தொழில் மளமளவென வளரும்.அரசின் இலவச வீட்டு மனைத் திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம்,உத்தியோகம்,தொழில், உயர்கல்வி போன்ற கவலைகள் நீங்கும்.கண்டகத்தில் சனி பகவான் நிற்பதால் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளை வழங்க தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
துலாம்
சீரான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார்.எடுத்த செயலில் இறுதிவரை போராடி வெற்றி பெறுவீர்கள். இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்கள் விலகி நிம்மதி பிறக்கும்.நிதானமாக சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். வாழ்நாள் லட்சியங்கள் கனவுகளை நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். கோட்ச்சார கிரகங்கள் சாதகமாக இருக்கும் காலங்களில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெண்கள் குடும்பத் தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.கலைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான நேரம்.ஆண்களுக்கு மாமனார் மூலம் அசையும், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும்.உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.கல்யாணக் கனவு நனவாகும்.திருமணம் புத்திர பாக்கியம் போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும்.குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவும்.
விருச்சிகம்
அனுகூலமான வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். உடன் இணைந்த 8, 11-ம் அதிபதி புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். பணபரஸ்தான இயக்கம் வலுவாக உள்ளதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.லாட்டரி, பங்குச் சந்தை, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை மூலம் பெரும் பணம் கிடைக்கும்.மூத்த சகோதர வழியில் சில பொருள் வரவு ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். 10.11.2025 அன்று பகல் 1.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம். தினமும் முருகனை வழிபட வினைகள் தீரும்.
தனுசு
லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும்.ராசியை தனம் வாக்கு குடும்பஸ்தான அதிபதி சனிப கவான் பார்க்கிறார்.லட்சியமும், எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும்.மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவி தமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார். இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் கிடைக்காது.மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக பழக வேண்டும். 10.11.2025 அன்று பகல் 1.03 முதல் 12.11.2025 அன்று மாலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். ஆரோக்கி யத்தை பேணவும்.ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும். தினமும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மகரம்
மனச் சங்கடம் குறையும் வாரம். ராசிக்கு வக்ரகதியில் உள்ள அதிசார குருவின் பார்வை உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டா கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும்.திருமணத் தடை அகலும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். தந்தை தொழில் அல்லது உத்தியோகம் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். 12.11.2025 அன்று மாலை 6.35 முதல் 15.11.2025 அன்று அதிகாலை 3.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்கள் மற்றும் மன சஞ்சலம் அதிகமாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
கும்பம்
தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 4-ம் பார்வை உள்ளது. கும்பத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் ராசியை பார்ப்பது சுபமான பலன் அல்ல. கோபுர கலசம் போல உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினருக்கு இது சவாலான காலமாகும்.தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம். சிலருக்கு பரம்பரை நோய்களான சுகர் பிரஷர் கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் அதிகமாகும்.பாகப்பிரிவினையால் மன பேதம் மிகுதியாகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். 15.11.2025 அன்று அதி காலை 3.51 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். இல் வாழ்க்கையில் பற்று குறையும். தினமும் ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.
மீனம்
மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. ஆளுமை திறன் கூடும்.வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். 3,8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோ கமாக இருக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகும். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
செல்: 98652 20406