ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-02.08.2025

Published On 2025-08-02 05:56 IST   |   Update On 2025-08-02 05:56:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில், உத்தியோகத்தில் தடைபட்ட உயர்வு தானாகக் கிடைக்கும்.

ரிஷபம்

யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையையடையச் சந்தர்ப்பம் வரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

மிதுனம்

இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

கடகம்

தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் மனதிற்கு பிடித்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

சிம்மம்

பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோக முயற்சியில் நேர்முகத் தேர்வில் வெற்றி உண்டு.

கன்னி

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பக்குவமாகப் பேசி சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

துலாம்

வெளிவட்டார பழக்க வழக்கம் விரிடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

விருச்சிகம்

வரவு இரு மடங்காகும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

தனுசு

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.

மகரம்

அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகளை செய்யும் சூழ்நிலை உருவாகும். திடீர் பயணம் திகைக்க வைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்

ஒற்றுமை பலப்படும் நாள். வழக்குகள் சாதகமாகும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். அரசு வேலைக்காக செய்த முயற்சி கைகூடும்.

மீனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

Tags:    

Similar News