Today Rasipalan-இன்றைய ராசிபலன் 9.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பணவரவு திருப்தி தரும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும்.
ரிஷபம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதிற்கினிய தகவல் வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள்.
மிதுனம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு.
கடகம்
குடும்பச்சுமை கூடும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
கன்னி
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உறவினர் பகை உருவாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.
விருச்சிகம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். செல்வாக்கு மிக்கவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
தனுசு
மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்துமுடிக்கும் நாள். வீடு, நிலம் சம்பந்தமான முடிவு எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
மகரம்
அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
கும்பம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு எளிதில் பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மீனம்
திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். தொழில் ரீதியான முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள்.