ராசிபலன்

Today Rasipalan-இன்றைய ராசிபலன் 8.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்

Published On 2025-11-08 05:41 IST   |   Update On 2025-11-08 05:41:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கலபமாக இருப்பர்.

ரிஷபம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம்

குடும்ப ஒற்றுமை கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

கடகம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டும்.

சிம்மம்

நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும்.

கன்னி

முயற்சி கைகூடும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

துலாம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள், விரயங்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.

தனுசு

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீண் பழிகள் அகலும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு.

மகரம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்

பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி மூலம் நல்ல செய்தியொன்று வந்து சேரும். பணவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி தரும்.

மீனம்

கடினமான காரியத்தைக் கூட எளிதாகச் செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

Tags:    

Similar News