Today Rasipalan- இன்றைய ராசிபலன் 6.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.
மிதுனம்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.
கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். புதிய பங்குதாரர்களால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். தொழிலில் பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நிதி நெருக்கடி ஏற்படும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. குடும்பச்சுமை கூடும். எதிர்பாராத விரயம் உண்டு.
துலாம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்கும். இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் உருவாகும். மருத்துவச் செலவு உண்டு.
விருச்சிகம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்குப் புதியவர்கள் வந்திணைவர்.
தனுசு
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் வரலாம்.
மகரம்
நல்ல தகவல் இல்லம் வந்து சேரும் நாள். சகோதரர் அனுகூலம் உண்டு. கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தொழில் போட்டிகள் அகலும்.
கும்பம்
புகழ்மிக்கவர்களின் ஆதரவு உண்டு. பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
மீனம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நல்லவிதம் நடைபெறும். பணவரவு திருப்தி அளிக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.