ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-16.08.25

Published On 2025-08-16 05:44 IST   |   Update On 2025-08-16 05:44:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். நீண்ட தூரப் பயணங்களால் பலன் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.

மிதுனம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.

கடகம்

தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைபேசி வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். வருமானம் திருப்தி தரும்.

சிம்மம்

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பிரியமான சிலரைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள்.

கன்னி

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

துலாம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறாமல் போகலாம். திடீர் மாற்றங்கள் பயணத்தில் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். மருத்துவ செலவு உண்டு.

விருச்சிகம்

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் உண்டு. பொருளாதார நிலை உயரும்.

தனுசு

புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் வந்து சேரலாம்.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நட்பால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.

கும்பம்

வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.

மீனம்

உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தடைகள் விலக தைரியமாக முடிவெடுப்பீர்கள். அயல்நாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

Tags:    

Similar News