ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-15.08.25

Published On 2025-08-15 05:46 IST   |   Update On 2025-08-15 05:46:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

புகழ் கூடும் நாள். புதிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை அடைவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

ரிஷபம்

நாடாளும் நபர்களின் நட்பால் நலம் சேரும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானே வரலாம். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

மிதுனம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.

கடகம்

வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்களே உங்கள் உதவி கேட்டு வரலாம். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும்.

சிம்மம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். நண்பர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆதாயம் தரும் காரியம் ஒன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

கன்னி

மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் உருவாகும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.

துலாம்

எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவப் பதவிகள் வரலாம். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

விருச்சிகம்

நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.

தனுசு

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மகரம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணற நேரிடும். விரயங்கள் உண்டு.

கும்பம்

முன்னேற்றம் ஏற்படும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

Tags:    

Similar News