Today Rasipalan-இன்றைய ராசிபலன் 14.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
ரிஷபம்
யோகமான நாள். இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர்.
மிதுனம்
சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். வியாபார போட்டிகள் அகலும். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கடகம்
வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம்
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.
கன்னி
நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வந்து சேரும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சொத்துகளிலிருந்த வில்லங்கங்கள் அகலும்.
விருச்சிகம்
பொருளாதார நிலை உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள்.
மகரம்
சேமிப்பு கரையும் நாள். திடீர் செலவுகளால் திணறல் ஏற்படும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது.
கும்பம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபாரப் போட்டிகள் அகலும்.