Today Rasipalan-இன்றைய ராசிபலன் 10.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். எதை செய்தாலும் தெளிவாகச் சிந்தித்து செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பழைய கடன் தீர எடுக்கும் முயற்சி பலன் தரும்.
மிதுனம்
தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கடகம்
உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சரியமான தகவல் வந்துசேரும்.
கன்னி
பாராட்டும், புகழும் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். தொழில் ரீதியான பயணங்கள் பலன் தரும்.
துலாம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
விருச்சிகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்படும். வியாபார விரோதம் உண்டு. பயணங்களை மாற்றி அமைப்பீர்கள்.
தனுசு
வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்துசேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.
மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் கூட இனி ஒத்துவருவர்.
கும்பம்
கடன் சுமை குறையும் நாள். செய்தொழிலில் மேன்மையுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
மீனம்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.