ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 29.07.2025

Published On 2025-07-29 07:37 IST   |   Update On 2025-07-29 07:37:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும்.

ரிஷபம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

மிதுனம்

குழப்பங்கள் தீரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் உண்டு.

கடகம்

பொருளாதார நெருக்கடி அகலும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய இனிய செய்தி வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று முடிவாகும்.

சிம்மம்

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்புக் கிட்டும். விடியும் பொழுதே வெற்றிச் செய்திகள் வந்து சேரும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

கன்னி

மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் விரயமுண்டு. அருகில் உள்ளவர்கள் உதவி செய்ய மறுப்பர். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்கும் அமைப்பு உண்டு.

துலாம்

முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றம் உண்டு. தனவரவு திருப்தி தரும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

விருச்சிகம்

பெருமைகள் வந்து சேரும் நாள். பிறர் போற்றும் வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும்.

தனுசு

புதிய பாதை புலப்படும் நாள். விருப்பங்கள் நிறைவேறும். உங்களுக்கு எதிராக போர்க்கொடி காட்டியவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். தொழில் வெற்றி நடைபோடும்.

மகரம்

யோகமான நாள். புது முயற்சிகள் வெற்றி தரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குழந்தைகளின் சுபகாரிய பேச்சுகள் கைகூடும்.

கும்பம்

எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். இடையூறு சக்திகள் வந்து சேரும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பணம் வந்த நிமிடமே செலவாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

மீனம்

நட்பால் நன்மை கிட்டும் நாள். பணம் வரும் பாதையைச் சீராக்கிக் கொள்வீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் குற்றச்சாட்டுகள் அகலும். சுபச்செய்திகள் வந்து சேரும்.

Tags:    

Similar News