ராசிபலன் - Rasi Palan

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.11.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும்

Published On 2025-11-05 07:35 IST   |   Update On 2025-11-05 07:35:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொல்லாதவர்கள் தானாகவே விலகுவர்.

ரிஷபம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். சுபச்செலவு உண்டு. உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.

மிதுனம்

நல்லது நடக்கும் நாள். எண்ணங்கள் நிறைவேறுவதில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலை விரிவு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

கடகம்

யோகமான நாள். உடல் நலம் சீராகும். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்சுமை குறையும். மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.

சிம்மம்

பொதுப்பிரச்சனைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு.

கன்னி

முயற்சியில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். வியாபார விரோதங்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் பொறுமையாகப் பழகுவது நல்லது.

துலாம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எதிரிகளின் பலம் குறையும். வியாபாரம் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். வி.ஐ.பி. க்களின் சந்திப்பு கிட்டும். வியாபார முன்னேற்றம் உண்டு.

தனுசு

நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

மகரம்

பற்றாக்குறை அகலும் நாள். பணவரவு கூடும். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். வீடு மாற்றம் மற்றும் நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

கும்பம்

வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட இயலாது.

மீனம்

வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு தொகை வந்து சேரும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர்.

Tags:    

Similar News