Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.11.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வருமானம் உயரும்.
ரிஷபம்
வீண்பழிகள் அகலும் நாள். வீடுமாற்றங்கள் நன்மை தரும். வங்கிகளில் வைப்புநிதி உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் உதவி உண்டு.
மிதுனம்
பஞ்சாயத்துக்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடப்பிறந்தவர்களின் வருகை உண்டு.
கடகம்
முயற்சிகள் கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு காரணமானவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
சிம்மம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உண்டு.
கன்னி
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வந்த வரன்கள் திரும்பிச் செல்லலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
துலாம்
வருமானம் திருப்தி தரும் நாள். திட்டமிட்டுச் செயலாற்றிச் சிறப்புப் பெறுவீர்கள். நண்பர்களின் மத்தியில் தனி முத்திரை பதிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
விருச்சிகம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச்சந்திப்பீர்கள்.
தனுசு
பற்றாக்குறை அகலும் நாள். மன அமைதிக்காக ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதை நம்பியும் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். வராத பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீடுமாற்றங்கள் ஏற்படலாம்.
கும்பம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
மீனம்
ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியும் நாள். உறவினர் வழி ஒத்துழைப்பு மனதிற்கு இதமளிக்கும். குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளைச் சமாளிப்பீர்கள்.