ரிஷபம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-09-18 07:30 IST   |   Update On 2023-09-18 07:30:00 IST

18.9.2023 முதல் 24.9.2023 வரை

சேமிப்பு உயரும் வாரம்.2,5-ம் அதிபதி புதன் 4-ம் அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.நாணயம் நீடிக்கும். புகழ், அந்தஸ்து,கவுரவம், பணபலம் உயரும்.முக்கியமான செயல்களைத் தெளிவாக திட்டமிட்டு செய்வதன் மூலம் மதிப்பு கூடும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படி யான நன்மைகள் உண்டு.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். ராசி அதிபதி சுக்ரன் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும்.கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.22.9.2023 மதியம் 3.35 முதல் 24.9.2023 இரவு 7.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.மேலும் பல பாக்கியங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News