வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாயின் 8-ம் பார்வையும் சனியின் 3ம் பார்வையும் உள்ளது. திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவினர்களின் அதிர்ஷ்ட சொத்து, பணத்தில் ஒரு பகுதி உங்களுக்கு கிடைக்கும். விவசாயிகள் ரியல் எஸ்டேட் துறையினருக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளது. போட்டி பந்தயங்களைத் தவிர்ப்பது நல்லது.
கடன் தொல்லையில் இருந்து மீள் வதற்கான வழிகள் தெரியும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகும். மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும். அவர்களின் நட்பு, கூட்டணி மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். உழைப்பிற்கும், முயற்சிக்கும் உரிய பலன்கள் வந்தடையும்.
மாற்று முறை வைத்தியத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.புதிய எதிர்பாலின நட்பு உங்களை தேவையற்ற திசைக்கு அழைத்துச் செல்லலாம். எனவே நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். மகாளய பட்ச காலங்களில் அசைவ உணவை தவிர்ப்பதால் வாழ்க்கைப் பயணம் இலகுவாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406