விருச்சகம் - விசுவாவசு வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 13:52 IST   |   Update On 2023-04-08 13:53:00 IST

உழைப்பிற்கேற்ற பலன்!

உள்ளுணர்வு நிறைந்த விருச்சிக ராசியினருக்கு சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு செல்வாக்கான ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப் படி ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குருபகவான் ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17 முதல் சனி பகவான் அர்தாஷ்டமச் சனியாக நான்காமிடமான சுக ஸ்தானத்தில் நின்று பலன் தந்து கொண்டு இருக்கிறார். தற்போது 6,12ம்மிடத்தில் நிற்கும் ராகு/கேதுக்கள் அக்டோபர் 30 முதல் 5,11ம்மிடம் செல்கிறார்கள்.முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள்.

கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். கொரோனா காலத்தில் தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாடு செல்வார்கள். இழந்த வெளிநாட்டு வேலை மீண்டும் கிடைக்கும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும்.

குடிப்பழக்கம், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மருத்துவத்தில் சீராக வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும்.திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். காதல் காலை வாரும்.

குடும்பம், பொருளாதாரம் : தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால்இழுத்து மூடிவிட்டு செல்லும் நிலையில் இருக்கும் தொழில் கூட விறுவிறுப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். பற்றாக்குறை வருமானத்தில் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு தேவைக்கு வருமானம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. குடும்பஉறுப்பினர்களிடையே அனுகூலமான சூழல் உருவாகும். சகலசௌபாக்கியமும் உருவாகும்.

சிலர் அழகு, அந்தஸ்து, ஆடம்பரம் நிறைந்த அப்பார்மென்ட்வீடு வாங்குவார்கள்.ஆறில் குரு ஊரில் பகை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அத்துடன் அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது. திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர்.

பெண்கள் : உங்களின் மனோநிலை வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை பிரம்மிக்க வைக்கும். இடமாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பணத்தேவைகளை சரி செய்ய முடியும். உங்கள் பெயரில் சொத்து வாங்குவீர்கள்.

விசாகம் 4 : உங்கள் முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டா கும் வருடம். வரு மானத்திற்கு ஏற்ற படி உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள் வீர்கள். உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மன பாரம் குறையும். சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகச் சொத்தை உங்களுக்கு விட்டுக் கொடுப்பார். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு சீராகும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். வெள்ளிக்கிழமை அஷ்டலஷ்மி ஸ்தோத்திரம் படிக்கவும்.

அனுஷம் : எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உண்டாகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும்.

சொத்தை வாடகை்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.உற்றார், உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. நேரத்திற்கு சூடான, சுவையான உணவு சாப்பிட முடியும்.தூர தேசங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். சனிக்கிழமை சுந்தரகாண்டம் படிக்கவும்.

கேட்டை : தடைபட்டசெயல்கள் வெகு விரைவில்செயலாக்கம் பெறும் காலம்.வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்.சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.அரசியல் ஆர்வலர்கள் கட்சிக்காகவும், பொது மக்களுக்காவும் மிகுதியான பொருள் விரயத்தை சந்திப்பார்கள். தள்ளுபடியில் பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2, 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.உத்தியோகத்தில் உயர் அதிகாரி பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதி கரிக்கும்.விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். பெற்றோர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள், மனத் தாங்கல்கள் விலகும். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். புதன் கிழமை ஸ்ரீ சரபேஸ்வரர் அஷ்டோத் திரம் படிக்கவும்.

பரிகாரம்: விருச்சிக ராசியினர் இந்த புத்தாண்டுக்கு திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வரதீராத வினைகள் தீரும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News