search icon
என் மலர்tooltip icon

  விருச்சகம் - குரோதி வருடம் வருட பலன்

  விருச்சகம்

  தமிழ் புத்தாண்டு ராசிபலன்

  நெருக்கடிகள் விலகும்! விடா முயற்சி விஷ்வரூப வெற்றி என்ற கொள்கை பிடிப்புடன் செயல்படும் விருச்சிக ராசியினருக்கு பிறக்கப்போகும் குரோதி வருட தமிழ் புத்தாண்டில் எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேற நல்வாழ்த்துக்கள்.

  சமசப்தம குருவின் பலன்கள்:

  விருச்சிக ராசிக்கு குரு 2, 5ம் அதிபதி. தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. பொதுவாக ராசியை குரு பார்க்கும் காலங்களில் சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகும். விருச்சிகத்திற்கு பரிபூரண யோகத்தை வழங்க கடமைபட்ட குரு சமசப்தம ஸ்தானம் செல்வது சுபத்தை வலுப்படுத்தும் அமைப்பு தானே. விருச்சிக ராசிக்கு சுபத்தை அதிகம் நல்கக் கூடிய குரு பகவான் மே 1, 2024 முதல் ஏழாமிடம் செல்கிறார். தனது முதல் தரமான சுப 5ம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.

  6ல் குரு நின்ற காலத்தில் கடுமையாக உழைத்த உழைப்பு இப்பொழுது பணமாக காய்க்கப் போகிறது. பல விதமான நற்பலன்கள் மகிழ்சியில் ஆழ்த்தும் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.

  எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும்.

  பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். சிலர் முதல் மனைவி இருக்கும் போதே பணத்திற்காக மறுமணம் செய்வார்கள். 7ம் பார்வையால் ராசியை பார்க்கிறார். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித் திறமை மிளிரும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.

  திருமணத் தடை நீங்கும். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம்.

  அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். அரசிடமிருந்த வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சில சமூக ஆர்வலர்க்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். குருவின் 9ம் பார்வை முயற்சி ஸ்தானத்தில் பதிகிறது.

  பாக்கிய பலம் அதிகரிக்கும். இறையருள் பரிபூரணமாக கிட்டும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.வாரிசுகளின் இடமாற்றம் நிம்மதி தரும்.

  அர்தாஷ்டமச் சனியின் பலன்கள்:

  விருச்சிகத்திற்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் 4ல் ஆட்சி பலம் பெற்று அர்தாஷ்டமச் சனியாக பலன் தந்து கொண்டு இருக்கிறார்.

  அஷ்டமச் சனியின் பாதிப்பில் பாதி நிச்சயம் உண்டு என்றாலும் தற்போது குரு பார்வை உங்களுக்கு கவசமாக உள்ளது. சனியின் 3ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிவதால் கடன்கள் பொசுங்கும். கடுமையாக உழைத்து உழைப்பிற்கான ஊதியம் நற்பெயர், அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். சிலர் கடன் பட்டு அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

  பெண்களால் காதல் மற்றும் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும்.

  சனியின் சம சப்தம பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. வெளிநாட்டு தொழில் முயற்சி வெற்றிதரும்.நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வியாபார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும்.சொத்துகள் சேரும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.

  உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம் என்பதால். கவனமாக இருப்பது நல்லது. சனியின் 10ம் பார்வை ராசியில் பதிகிறது. ராசியை குருவும் பார்க்கிறார்.

  ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் புதிய முன்னேற்றம் உண்டாகும். கட்டுப்பாடற்ற சுக வாழ்க்கை கிடைக்கும். உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும்.ஒரு சிலருக்கு முன்கோபங்கள் அதிகரிக்கும்.

  இதனால் தேவையற்ற பிரச்சனைகள், மன வருத்தம் ஏற்படும். அதனால் பேச்சில், செயல்பாட்டில் கவனமாக இருக்கவும்.சில பிள்ளைகள் உயர் கல்விக்கு வெளிநாட்டில், வெளியூர் விடுதியில் தங்கி படிப்பார்கள்.

  பஞ்சம ராகு/லாப கேது:

  5ல் ராகு, 11ல் கேது. 5ம்மிடம் என்பது அதிர்ஷ்டம், பூர்வீகம், குல தெய்வம், குழந்தைகள், காதல், பூர்வ புண்ணியம், ஆழ் மன சிந்தனை பற்றிக் கூறுமிடம். இந்த இடத்தில் நிற்கும் ராகுவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பூர்வீகச் சொத்தில் நிச்சயம் ஒரு முடிவை தந்து விடுவார். வேற்று மத நம்பிக்கையை அதிகரிப்பார் அல்லது இறை வழிபாட்டில் ஆர்வம் குறையும்.

  பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காக செல்வீர்கள். பங்குச் சந்தையில் உங்களுக்கு என்று தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். தம்பதிகளின் தேவையற்ற எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பருவ வயதினர் இனக்கவர்ச்சியால் காதல் வலையில் சிக்கி வாழ்க்கையை கேள்வி குறியாக்க கூடாது. செயற்கை கருத்தரிப்பை நாடுபவர்களுக்கு சாதகமான பலன் உண்டு.

  உப ஜெய ஸ்தானமான 11ல் கேது. சுய ஜாதகத்திலும் கோட்சாரத்திலும் உப ஜெய ஸ்தானமான 11ல் எந்த கிரகம் இருந்தாலும் நன்மைகள் இரட்டிப்பாகும். தொழிலுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும்.

  வீடு, வாகனம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.தன வரவு அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் நன்மை தரும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும்.

  விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலால் ஆதாயம் அதிகரிக்கும். மன அமைதி தரும் புண்ணிய யாத்திரைகள் சென்று வருவீர்கள். 11ம் மிடத்திற்கு குருப்பார்வையும் உள்ளதால் மறு விவாகம் முயற்சி பலன்தரும். ஏற்கனவே திருமணம் நடந்தவர்களுக்கு எதிர்பாலின நட்பால் வாழ்க்கை தடம் புரளாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

  விசாகம் 4:

  குருவின் விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் பாக்கிய பலன்கள் மிளிரும் வருடம். இது வரை உங்கள் வாழ்வில் தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் உங்களை தேடிவரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். வாக்கு வன்மையால் நன்மை பெருகும். உயர் கல்வி பயில்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

  தொழில் விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். உடன் பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து தொடர்பாக பேச்சு வார்த்தை நடக்கும். செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். திருமணத் தடை அகலும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை சேரும். கோர்ட், கேஸ் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.

  புனித யாத்திரைகள் செல்வீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் உங்களை வழி நடத்தும் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும் ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.

  அனுஷம்

  சனிபகவானின் அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் திருப்திகரமான புத்தாண்டாக இருக்கப் போகிறது. திருப்பு முனை யான சம்பவங்கள் நடக்கும். தொழிலை தொடர்ந்து நடத்தலாமா? இழுத்து மூடி விட்டு செல்லமா என்று கவலையுடன் இருந்த வர்களுக்கு தொழிலில் நல்ல திருப்புமுனை உண்டாகும்.

  தொழில், உத்தியோகத்தில் பொறுமை, கடமை உணர்வு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். மனகுழப்பம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். வேலையில் நிலவிய டென்சன் குறையும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும்.

  மறு மண முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்தில் நிலவிய சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள்.

  எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். சொத்துகள், வாகனங்கள் சேரும். சிவனடியார்களுக்கு உதவ மன உளைச்சல் குறையும்.

  கேட்டை

  புத பகவானின் ஆதிக்கம் பெற்ற கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் புதிய முயற்சிகள் வெற்றி தரும் ஆண்டாக அமையும். நெருக்கடிகள் விலகும் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும் தன வரவில் தன்னிறைவு உண்டாகும். இடப்பெயர்ச்சி ஏற்படும். கேட்டை கோட்டை கட்டும் என்பது பழமொழி. உங்களின் கனவில் லட்சியங்கள் எண்ணங்கள் அனைத்தும் கோட்டையாக பலம் பெறும்.

  சுயதொழிலில் அபாரமான வளர்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய வேலையில் மனம் திருப்தியடையும்.

  நிறைவான ஊதியம் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் அலைச்சல் அதிகமாகும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக்கொடுத்து செல்லவும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது.

  கடன் தொகை வெகுவாக குறையும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள், வராக்கடன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். திருமண முயற்சி வெற்றி தரும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். புதன்கிழமையில் துளசி அர்ச்சனை செய்து மகா விஷ்ணுவை வணங்க சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

  திருமணம்

  2, 5ம் அதிபதியான குரு ராசிக்கு 7ல் நின்று ராசி, 3, 11ம் மிடங்களைப் பார்ப்பதால் சுய ஜாதக ரீதியான குறைகள் விலகி திருமண வாய்ப்புகள் தேடி வரும். 5 ம் அதிபதி குரு 7ல் மற்றும் 5ல் ராகு இருப்பதால் பெரும்பான்மையாக காதல் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு குருவருளும் திருவருளும் நிரம்பி இருக்கும்.

   பரிகாரம்:

  செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினர் குரோதி வருட தமிழ் புத்தாண்டிற்கு சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் மருதமலை முருகன் கோயில். கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார். முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது.

  விருச்சகம்

  சோபகிருது வருட பலன் 2023

  உழைப்பிற்கேற்ற பலன்!

  உள்ளுணர்வு நிறைந்த விருச்சிக ராசியினருக்கு சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு செல்வாக்கான ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப் படி ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குருபகவான் ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17 முதல் சனி பகவான் அர்தாஷ்டமச் சனியாக நான்காமிடமான சுக ஸ்தானத்தில் நின்று பலன் தந்து கொண்டு இருக்கிறார். தற்போது 6,12ம்மிடத்தில் நிற்கும் ராகு/கேதுக்கள் அக்டோபர் 30 முதல் 5,11ம்மிடம் செல்கிறார்கள்.முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள்.

  கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். கொரோனா காலத்தில் தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாடு செல்வார்கள். இழந்த வெளிநாட்டு வேலை மீண்டும் கிடைக்கும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும்.

  குடிப்பழக்கம், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மருத்துவத்தில் சீராக வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும்.திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். காதல் காலை வாரும்.

  குடும்பம், பொருளாதாரம் : தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால்இழுத்து மூடிவிட்டு செல்லும் நிலையில் இருக்கும் தொழில் கூட விறுவிறுப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். பற்றாக்குறை வருமானத்தில் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு தேவைக்கு வருமானம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. குடும்பஉறுப்பினர்களிடையே அனுகூலமான சூழல் உருவாகும். சகலசௌபாக்கியமும் உருவாகும்.

  சிலர் அழகு, அந்தஸ்து, ஆடம்பரம் நிறைந்த அப்பார்மென்ட்வீடு வாங்குவார்கள்.ஆறில் குரு ஊரில் பகை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அத்துடன் அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது. திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர்.

  பெண்கள் : உங்களின் மனோநிலை வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை பிரம்மிக்க வைக்கும். இடமாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பணத்தேவைகளை சரி செய்ய முடியும். உங்கள் பெயரில் சொத்து வாங்குவீர்கள்.

  விசாகம் 4 : உங்கள் முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டா கும் வருடம். வரு மானத்திற்கு ஏற்ற படி உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள் வீர்கள். உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

  சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மன பாரம் குறையும். சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகச் சொத்தை உங்களுக்கு விட்டுக் கொடுப்பார். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு சீராகும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். வெள்ளிக்கிழமை அஷ்டலஷ்மி ஸ்தோத்திரம் படிக்கவும்.

  அனுஷம் : எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உண்டாகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும்.

  சொத்தை வாடகை்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.உற்றார், உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. நேரத்திற்கு சூடான, சுவையான உணவு சாப்பிட முடியும்.தூர தேசங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். சனிக்கிழமை சுந்தரகாண்டம் படிக்கவும்.

  கேட்டை : தடைபட்டசெயல்கள் வெகு விரைவில்செயலாக்கம் பெறும் காலம்.வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்.சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.அரசியல் ஆர்வலர்கள் கட்சிக்காகவும், பொது மக்களுக்காவும் மிகுதியான பொருள் விரயத்தை சந்திப்பார்கள். தள்ளுபடியில் பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2, 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.உத்தியோகத்தில் உயர் அதிகாரி பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதி கரிக்கும்.விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். பெற்றோர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள், மனத் தாங்கல்கள் விலகும். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். புதன் கிழமை ஸ்ரீ சரபேஸ்வரர் அஷ்டோத் திரம் படிக்கவும்.

  பரிகாரம்: விருச்சிக ராசியினர் இந்த புத்தாண்டுக்கு திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வரதீராத வினைகள் தீரும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  விருச்சகம்

  சுபகிருது வருட பலன் - 2023

  கோபத்தை குணத்தையும் ஒரு சேரப் பெற்ற விருச்சிக ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் வெற்றி மேல் உண்டாக நல் வாழ்த்துகள்.

  ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 5ம் இடத்தில் நிற்கிறார். சனிபகவான் 3, 4ம் இடத்தில் உலா வருகிறார். இந்த தமிழ் புத்தாண்டில் குருபகவான் இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுத் தரப் போகிறார். தொட்டது துலங்கும். எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகிறது. தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகப் போகிறது.முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப் போகிறது.

  இது வரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்களின் பெயர் புகழ் பரவும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும்.ஆன்ம பலம் பெருகும்.அசுப கிரகங்களான ராகுவும், கேதுவும் மறைவு ஸ்தானத்திற்கு செல்லுவதால் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். இதனால் மகிழ்ச்சி கடலில் நீந்தப் போகிறீர்கள். ஒளிமயமான எதிர்காலம் உங்களை வழிநடத்தப் போகிறது. எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும் பலிதமாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பெற்றி பெறுவீர்கள்.விருச்சிக ராசியினரின் திறமைகளை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது.

  குடும்பம்:ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் நின்ற காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும்.மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். குடும்ப ஸ்தானதிபதி குரு 5ல் ஆட்சி பலம் பெறுவதால் குடும்ப உறுப்பினர்களிடம் சகஜ நிலை திரும்பும். உங்கள் குடும்ப நிலை உயரும். சிலருக்கு குடும்ப பொறுப்பைஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சகோதர சகோதரிமேல் அன்புஅதிகரிக்கும். குடும்ப உறவுகள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியப் பேச்சுக்கள் கைகூடும். குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது. பூர்வகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமுகமாக தீர்க்கப்படும்.சிலர் தாத்தா, பாட்டியாகுவார்கள்.பெண்கள் கருத்தரிப்பார்கள்.

  ஆரோக்கியம்:6ல் ராகு இருப்பதால் உடல் உடல் பெருக்கம் ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும்.

  திருமணம்:கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோட்சார ராகு, கேதுவால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும்.

  பெண்கள்:பெண்களுக்குகுடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு சிறப்பாக இருக்கும். அழகிய, ஆடம்பர விலையுயர்ந்த வெளிநாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள் கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் ஆதரவு மகழ்ச்சி தரும்.உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள்.குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும்.

  மாணவர்கள்:கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். 6ல் ராகு இருப்பதால் போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. படிப்பை நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வாய்ப்பு உண்டாகும். அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

  உத்தியோகஸ்தர்கள்:அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கு உபரி,தனி வருமானம்' மகிழ்ச்சியைத் தரும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு காரிய சித்தி உண்டு. தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும்.

  முதலீட்டாளர்கள்:இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.

  அரசியல்வாதிகள்:6ல் ராகு இருப்பதால் விருச்சிக ராசி அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து எதிரியை விரட்டுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள். நினைத்த சாதிக்க கூடிய பணபலம், படை பலம் பெருகும். 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற குருபகவான் பதவிக்கு, கவுரவத்திற்கு கவசமாக இருப்பார். தேர்தலில் செலவழித்த தொகை வீண் போகாது. கடந்த கால நெருக்கடிகள் நீங்கும்.

  கலைஞர்கள்: கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான நேரம். வெளிநாட்டுபயணத்தை குறிக்கும் 12ம் இடத்தில் கேது இருப்பதால் கலை நிகழ்ச்சிகளுக்காக பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவு பல மடங்காக அதிகரிக்கும்.

  விவசாயிகள்:விவசாயம் சிறக்கும். கிணறு தோண்டுதல் பம்பு செட் போடுதல் போன்ற பணிகள் நடைபெறும். புதிய விவசாய நிலங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்

  பூர்வகச் சொத்துகள் உங்களுக்கு சுமுகமான பாகப் பிரிவினையில் கிடைக்கும். விவசாயக் கடன் ரத்தாகும். உங்களின் விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

  கவனமாக செயல்பட வேண்டிய காலம்.

  ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு ஆறிலும் கேது பன்னிரண்டிலும் சஞ்சரிப்பதால்சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலர் பணியிலிருந்து ஒய்வு பெறலாம்.

  பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். சிலர் குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். சிலர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்க இயக்கத்தில் சேரலாம். சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லலாம். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரையச் செலவு அதிகமாகும்.

  குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 3ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களின் மேல் அக்கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலமாகும். சிலர்வேற்று மதத்திற்கு மாறி விடுவார்கள். வீடு அல்லது அலுவலகம் தொடர்பானஇடமாற்றம் ஏற்படும்.

  பரிகாரம்:திங்கட்கிழமை காலை 6 -7 சந்திர ஓரையில் சிவ பெருமானை வழிபட கடன் தொல்லை கட்டுப்படும்.

  ராஜ யோகம்

  ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் குருவால் பலம் பெறுவதால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் இணைந்து விபரீத ராஜ யோகத்தை தரும். நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். இதுவரை பங்கு சந்தை பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட பங்கு வர்த்தகத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் உருவாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×