துலாம் - ஆண்டு பலன் - 2026

புத்தாண்டு ராசிபலன்கள்-2024

Published On 2023-12-29 15:33 IST   |   Update On 2023-12-29 15:34:00 IST

நியாயமும், நேர்மையும் நிறைந்த துலாம் ராசியி னருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆண்டின் துவக்கத்தில் குருபகவான் ராசியை பார்ப்பது உங்களுக்கு யோகம். ஏப்ரல் 21-ல் குரு பகவான் அஷ்டம ஸ்தானம் சென்றா லும் பஞ்சம ஸ்தான சனி பகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். அசுப கிரகங்களான ராகு கேதுக்கள் மறைவு ஸ்தானம் செய்வதால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.

குருவின் சஞ்சார பலன்கள்

சமசப்தம ஸ்தானமான 7-ம்மிடத்தில் நிற்கும் குரு பகவான் ஏப்ரல் 21 வரை ராசியைப் பார்ப்பதால் இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். செயல்திறனில் மாற்றம் ஏற்படும். ஏப்ரல் 21-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டம ஸ்தானம் செல்லும் குரு பகவான் 5ம் பார்வையால் 12-ம்மிடமான அயன சயன, விரய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் 2-ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் 4ம்மிடமான சுக ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

அஷ்டம குருவாக இருந்தாலும் துலாத்திற்கு குரு 3, 6ம் அதிபதி. ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானம் செல்வது விபரீத ராஜ யோகம். சுப நிகழ்வுகள் சுப செலவுகளையும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் பணம் வந்து மனதையும் பையையும் நிரப்பும். கஷ்டங்கள், கவலைகள் நீங்கி பொருளாதார நிலைமை சீராகும். வீடு, நிலம், வாகனம் போன்ற சுப விரைய செலவுகள் உண்டாகும். வேலையில் லகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வீர்கள்.குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக கிடைக்கும்.

சனியின் சஞ்சார பலன்கள்

ஆண்டு முழுவதும் ராசிக்கு 5ம்மிடமான பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தனது 3 ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் 10-ம் பார்வையால் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். 5ம் அதிபதி சனி 5ல் ஆட்சி பலம் பெறுவதால் மிகப்பெரிய வாழ்வியல் மாற்றங்களைத் சந்திப்பீர்கள்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.ஆன்ம பலம் பெருகும். புத்திரப் பிராப்த்தத்தில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும்.பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல திருப்பு முளையான சம்பவங்கள் நடைபெறும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும்.

குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. விட்டு விலகிய சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு நாடி வந்து பேசுவார்கள்.மனக்கவலைகள் நீங்கும். இழுபறி நிலை மாறி மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது.பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

ராகு-கேது சஞ்சார பலன்கள்

ராகு பகவான் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கேது பகவான் 12ம்மிடமான மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள், எதிரிகள் தொல்லைகளை ராகு பகவான் தீர்க்கப்போகிறார். அடமான நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்கும் சந்தர்ப்பம் உருவாகும்.

வாழ்க்கை, தொழில் முன்னேற்றத்திற்கு கடன் தேவைப்படுபவர்களுக்கு புதிய கடன் கிடைக்கும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். மாணவ, மாணவிகள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வார்கள். சிலர் மதம் மாறுவார்கள். இல் வாழ்க்கையில் விருப்பக் குறைவு ஏற்படும். தூக்கமின்மை இருக்கும்.ஆன்மீக நாட்டம் கூடும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். சிலருக்கு தாய்மாமன் மூலம் வம்பு, வழக்கு உருவாகும்.

சித்திரை 3,4

இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். வீடு, வாகனம் ஆடம்பர பொருள் சேரும். இன்சூரன்ஸ், ஏலச் சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு வரும்.

கண், கண் புரை தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை பலன் தரும். எதிரிகள் தொல்லை இருந்தாலும் பாதிப்பு எதிரிக்கே ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். அந்நிய தேசத்தில் வாழ விருப்பம் அதிகரிக்கும். பழநி முருகனை வழிபடவும்.

சுவாதி

பொருளாதார முன்னேற்றம் பெருகும் வருடம். பல வருடங்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமைகிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை கூடும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குரு, சனி பார்வை இருப்பதால் வாக்கால் வருமானம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். தந்தை வர்க்கத்தால் பல நன்மைகள் ஏற்படும்.விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும் புத்திர பிராப்தம் சித்திக்கும். எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும். வாழ்க்கைத் துணைக்காக செய்த மருத்துவ செலவுகள் இனி முடிவுக்கு வரப்போகிறது. நரசிம்மரை வழிபடவும்.

விசாகம் 1, 2,3

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வருடம்.இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத் துணையின் வருமானம் இரட்டிப்பாகும்.புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். கர்ம வினை அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தெரியும் ஆயுள் பலம் உண்டு.

வேற்று மதத்தினர் அல்லது புரியாத பாஷை அதிகம் பேசும் இடத்தில் குடியிருக்கும் நிலை ஏற்படும். மூத்த சகோதரர் உங்களுக்கு விட்டு கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒப்புதலுடன் பாகப்பிரிவினை நடக்கும். அவர்கள் மூலம் லாபம், சொத்துக்கள் கிடைக்கலாம். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றி தரும். சித்தர்களை வழிபடவும்.

திருமணம்

திருமணத் தடை அகலும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமாக திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடைபெறும். ஏப்ரல் வரை ராசியை குரு பார்ப்பதால் வசதியான நல்ல வாழ்க்கைத் துணை. அமையும் மறுமண யோகம் உள்ளது.

பெண்கள்

பெண்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமை'பலப்படும்.பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது.பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

வியாபாரிகள்

தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.புதிய தொழில் ஒப்பந்தம் வந்து கொண்டே இருக்கும்.சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நாளை வரப் போகும் வருமானத்திற்குரிய செலவு தொகை இன்றே செலவாகிவிடும். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

உத்தியோகஸ்தர்கள்

படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலையில் சேர உத்தரவு வரும். பணிச்சுமை அதிகரிப்பால் செயல்பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்னம், தேவையற்ற கோபம் வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

அரசியல்வாதிகள்

பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவதுநல்லது தான். 6ம்மிடம் பலம் பெறுவதால் எதிரிகள் விலகுவார்கள். எண்ணிய செயலை ஈடேற்ற ஏராளமாகச் செலவிடும் சூழல் உருவாகும்.புகழ் கூடும்.ஓய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும்.சமுதாயத்தில் ஒரு கவுரவமான நிலையை எட்டக் கூடிய யோகமும் உயர் பதவி அதிர்ஷ்டமும் உண்டாகும்.

பரிகாரம்

வெற்றிலை, பாக்குடன் கிராம்பு, ஏலக்காய் வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட குல தெய்வம் அம்மனை வழிப்பட்டால் துன்பம் தீரும்.

Similar News