search icon
என் மலர்tooltip icon

  துலாம் - ஆண்டு பலன் - 2024

  துலாம்

  புத்தாண்டு ராசிபலன்கள்-2024

  நியாயமும், நேர்மையும் நிறைந்த துலாம் ராசியி னருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ஆண்டின் துவக்கத்தில் குருபகவான் ராசியை பார்ப்பது உங்களுக்கு யோகம். ஏப்ரல் 21-ல் குரு பகவான் அஷ்டம ஸ்தானம் சென்றா லும் பஞ்சம ஸ்தான சனி பகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். அசுப கிரகங்களான ராகு கேதுக்கள் மறைவு ஸ்தானம் செய்வதால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.

  குருவின் சஞ்சார பலன்கள்

  சமசப்தம ஸ்தானமான 7-ம்மிடத்தில் நிற்கும் குரு பகவான் ஏப்ரல் 21 வரை ராசியைப் பார்ப்பதால் இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். செயல்திறனில் மாற்றம் ஏற்படும். ஏப்ரல் 21-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டம ஸ்தானம் செல்லும் குரு பகவான் 5ம் பார்வையால் 12-ம்மிடமான அயன சயன, விரய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் 2-ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் 4ம்மிடமான சுக ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

  அஷ்டம குருவாக இருந்தாலும் துலாத்திற்கு குரு 3, 6ம் அதிபதி. ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானம் செல்வது விபரீத ராஜ யோகம். சுப நிகழ்வுகள் சுப செலவுகளையும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் பணம் வந்து மனதையும் பையையும் நிரப்பும். கஷ்டங்கள், கவலைகள் நீங்கி பொருளாதார நிலைமை சீராகும். வீடு, நிலம், வாகனம் போன்ற சுப விரைய செலவுகள் உண்டாகும். வேலையில் லகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வீர்கள்.குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக கிடைக்கும்.

  சனியின் சஞ்சார பலன்கள்

  ஆண்டு முழுவதும் ராசிக்கு 5ம்மிடமான பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தனது 3 ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் 10-ம் பார்வையால் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். 5ம் அதிபதி சனி 5ல் ஆட்சி பலம் பெறுவதால் மிகப்பெரிய வாழ்வியல் மாற்றங்களைத் சந்திப்பீர்கள்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.ஆன்ம பலம் பெருகும். புத்திரப் பிராப்த்தத்தில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும்.பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல திருப்பு முளையான சம்பவங்கள் நடைபெறும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும்.

  குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. விட்டு விலகிய சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு நாடி வந்து பேசுவார்கள்.மனக்கவலைகள் நீங்கும். இழுபறி நிலை மாறி மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது.பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

  ராகு-கேது சஞ்சார பலன்கள்

  ராகு பகவான் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கேது பகவான் 12ம்மிடமான மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள், எதிரிகள் தொல்லைகளை ராகு பகவான் தீர்க்கப்போகிறார். அடமான நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்கும் சந்தர்ப்பம் உருவாகும்.

  வாழ்க்கை, தொழில் முன்னேற்றத்திற்கு கடன் தேவைப்படுபவர்களுக்கு புதிய கடன் கிடைக்கும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். மாணவ, மாணவிகள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வார்கள். சிலர் மதம் மாறுவார்கள். இல் வாழ்க்கையில் விருப்பக் குறைவு ஏற்படும். தூக்கமின்மை இருக்கும்.ஆன்மீக நாட்டம் கூடும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். சிலருக்கு தாய்மாமன் மூலம் வம்பு, வழக்கு உருவாகும்.

  சித்திரை 3,4

  இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். வீடு, வாகனம் ஆடம்பர பொருள் சேரும். இன்சூரன்ஸ், ஏலச் சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு வரும்.

  கண், கண் புரை தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை பலன் தரும். எதிரிகள் தொல்லை இருந்தாலும் பாதிப்பு எதிரிக்கே ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். அந்நிய தேசத்தில் வாழ விருப்பம் அதிகரிக்கும். பழநி முருகனை வழிபடவும்.

  சுவாதி

  பொருளாதார முன்னேற்றம் பெருகும் வருடம். பல வருடங்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமைகிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை கூடும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குரு, சனி பார்வை இருப்பதால் வாக்கால் வருமானம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

  உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். தந்தை வர்க்கத்தால் பல நன்மைகள் ஏற்படும்.விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும் புத்திர பிராப்தம் சித்திக்கும். எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும். வாழ்க்கைத் துணைக்காக செய்த மருத்துவ செலவுகள் இனி முடிவுக்கு வரப்போகிறது. நரசிம்மரை வழிபடவும்.

  விசாகம் 1, 2,3

  நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வருடம்.இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத் துணையின் வருமானம் இரட்டிப்பாகும்.புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். கர்ம வினை அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தெரியும் ஆயுள் பலம் உண்டு.

  வேற்று மதத்தினர் அல்லது புரியாத பாஷை அதிகம் பேசும் இடத்தில் குடியிருக்கும் நிலை ஏற்படும். மூத்த சகோதரர் உங்களுக்கு விட்டு கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒப்புதலுடன் பாகப்பிரிவினை நடக்கும். அவர்கள் மூலம் லாபம், சொத்துக்கள் கிடைக்கலாம். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றி தரும். சித்தர்களை வழிபடவும்.

  திருமணம்

  திருமணத் தடை அகலும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமாக திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடைபெறும். ஏப்ரல் வரை ராசியை குரு பார்ப்பதால் வசதியான நல்ல வாழ்க்கைத் துணை. அமையும் மறுமண யோகம் உள்ளது.

  பெண்கள்

  பெண்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமை'பலப்படும்.பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது.பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

  வியாபாரிகள்

  தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.புதிய தொழில் ஒப்பந்தம் வந்து கொண்டே இருக்கும்.சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நாளை வரப் போகும் வருமானத்திற்குரிய செலவு தொகை இன்றே செலவாகிவிடும். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

  உத்தியோகஸ்தர்கள்

  படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலையில் சேர உத்தரவு வரும். பணிச்சுமை அதிகரிப்பால் செயல்பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்னம், தேவையற்ற கோபம் வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

  அரசியல்வாதிகள்

  பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவதுநல்லது தான். 6ம்மிடம் பலம் பெறுவதால் எதிரிகள் விலகுவார்கள். எண்ணிய செயலை ஈடேற்ற ஏராளமாகச் செலவிடும் சூழல் உருவாகும்.புகழ் கூடும்.ஓய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும்.சமுதாயத்தில் ஒரு கவுரவமான நிலையை எட்டக் கூடிய யோகமும் உயர் பதவி அதிர்ஷ்டமும் உண்டாகும்.

  பரிகாரம்

  வெற்றிலை, பாக்குடன் கிராம்பு, ஏலக்காய் வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட குல தெய்வம் அம்மனை வழிப்பட்டால் துன்பம் தீரும்.

  துலாம்

  ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

  கலையார்வம் நிறைந்த துலாம் ராசியினருக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு நன்மைகளே மிகுதியாக நடக்க நல் வாழ்த்துக்கள். செல்வாக்கு, திறமை, பெருமை, கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். சனி பகவானின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது.குரு மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் சுமாராக உள்ளது. இனி இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

  குருவின் சஞ்சார பலன்கள்:

  துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை 6ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு ஏழாமிடம் சென்று ராகுவோடு இணைந்து ராசியைப் பார்ப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும். 5ம் அதிபதி சனியின் பார்வை பெறுவதால் புகழ் மிக்கவர்களைக் கொண்டு முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும்.

  தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு சம்பள உயர்வு என்று அனைத்து வித நன்மைகளும் தேடிவரும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

  பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை மகிழ்ச்சி தரும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். சிலர் குறைந்த ஊதியத்திற்கு அதிகம் உழைக்கும் சூழ்நிலை ஏற்படும் .மறுமண முயற்சி தடைபடும். எதிர்பாராத மாமனாரின் உதவி ஆச்சரியமூட்டும்.சத்ருக்கள் தொல்லை அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடுவதால் அமைதியாக இருப்பது தொழிலையும், தொழில் கூட்டாளிகளையும் காக்கும் .

  சனியின் சஞ்சார பலன்கள்:

  துலாம் ராசிக்கு 4, 5ம் அதிபதியான சனிபகவான் ஜனவரி 17, 2023 முதல் 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொழிலில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம்.

  வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.

  வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள். கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களில் அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயற்சிப்பார்கள். பாகப் பிரிவினைச் சொத்து குடும்ப உறுப்பினர்களால் ஏமாற்றப்படலாம்.

  ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

  கோட்சார ராகு அக்டோபர் 30, 2023 வரை 7ம் இடத்திலும் கேது ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு 6ம் இடத்திலும் கேது 12ம் இடமும் செல்கிறார்கள். உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.

  எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டாலும் ஏதேனும் ஒருவகையில் செலவைச் சரி செய்ய தேவையான பணம் வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும்.

  திருமணம்: கோட்சார குரு 7ல் நின்று ராசியைப் பார்ப்பதால் சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பாதிப்பும் இல்லாவிடில் உரிய வயதில் திருமணம் நடந்து முடியும். அதே நேரத்தில் சனி பார்வையும் 7ம் இடத்திற்கு இருப்பதால் வாழ்க்கைத் துணை பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு உண்டாகும். தேடி வந்த வரனை குறை கூறி தாமே திருமணத் தடையை ஏற்படுத்திக் கொள்வார்கள். எனவே விரும்பி வரும் வரனை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

  பெண்கள்: பெண்களுக்கு மன சஞ்சலம் நீங்கி நிம்மதி பிறக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

  மாணவர்கள்: உடல் நிலை மேம்படும்.படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் கல்லூரிப் படிப்பைத் தவிர்த்து தொழிற்கல்வியில் சேர முயற்சிப்பார்கள். போட்டித் தேர்வில் வெற்றி பெற பெற்றோர்கள், ஆசிரியர்கள் உதவியாக இருப்பார்கள்.

  சித்திரை 3, 4: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம. தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

  நெடுந்தூர பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். பண்டிகைகள் விழாக்களில் கலந்து கொண்டு ஆனந்தமடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும் வாய்ப்பு குறைவு. யாரையும் நம்பி வாக்கு கொடுக்க வேண்டாம். பிறருக்கு ஆலோசனை வழங்குவதால் மனக்கசப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். உடல் அசதி, கை கால் உளைச்சல் மருத்துவத்தில் கட்டுப்படும். வயோதிகர்களுக்கு பிள்ளைகளால் ஏற்பட்ட அசெளகரியங்கள் குறையும்.

  பரிகாரம்: தினமும் துர்க்கா அஷ்டோத்திரம் கூறவும்.

  சுவாதி: குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் உழைப்பது நீங்கள் நல்ல பெயர் வாங்குவது உங்களை விரட்ட நினைக்கும் சக ஊழியராக இருப்பார். காதலிப்பவர்கள் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் மற்றும் உங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தவறான முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

  திருமண சுப காரியங்க ளுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதிக பேச்சு வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மறு திருமண முயற்சி சாதகமாகும்.

  பரிகாரம்: செவ்வாய் கிழமை காலை11-12 மணி வரையிலான சனி ஓரையில் விநாயகரை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.

  விசாகம் 1,2,3: நினைத்ததை நடத்தி முடிக்க அதிக முயற்சி செய்ய நேரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சகோதர வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும்.

  தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். மைத்துனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை , உயில் சொத்து கிடைக்கும்.தந்தையின் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் குறையும்.

  பரிகாரம்: அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இயன்ற மருத்துவ உதவி செய்ய வேண்டும்.

  புத்தாண்டிற்கு துலாம் ராசியினர் சென்று வழிபட வேண்டிய திருத்தலம் படவேடு ரேணுகாம்பாள் கோயில், வேலூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கே ரேணுகா பரமேஸ்வரி என்ற பெயருடன் கோயில் கொண்டிருக்கிறாள். துலாம் ராசியினர் இந்த புத்தாண்டிற்கு இங்கு சென்று வரவும்.

  துலாம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  பிறரை எளிதில் வசீகரிக்கும் ஆற்றல் நிறைந்த துலா ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த் துக்கள். இந்த ஆண்டில் பல வளமான பலன்கள் கிடைக்க உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் தேடி வரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். இந்த ஆண்டில் குரு மற்றும் ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சுமாராகவே உள்ளது.

  4--ல் சுகாதிபதி சனி ஆட்சி பலம் பெற்றதால் இந்த ஆண்டு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். மன உளைச்சல் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை திட்டமிட்டு முறையாக பயன்படுத்தினால் இந்த புத்தாண்டு பொற்காலமாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இனி புத்தாண்டு பலன்களை விரிவாகக் காணலாம்.

  குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 13, 2022 வரை குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக நாட்டம் மிகுதியாகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும்.சாஸ்த்திர ஞானம் அதிகரிக்கும். ஜோதிடம் கற்கும் ஆர்வம் வரும்.

  சமுதாய அந்தஸ்த்தை உயர்த்தக் கூடிய சங்கங்க ளில் முக்கிய நிர்வாகப் பதவிகள் தேடி வரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். கைவிட்டுப் போன பூர்வீகச் சொத்து திரும்பி வரும். புனித ஸ்தலங்களுக்கு சென்று புனித நீராடுவார்கள். காசி ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை செல்வார்கள். எப்பொழுதும் யாருக்காவது ஏதேனும் உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். வலது பக்க வீட்டுக்காரரின் தொல்லை குறையும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். தந்தை வழி பூர்வீகச் சொத்து சில மனஸ்தாபங்களுக்கு பின் கிடைக்கும்.

  ஏப்ரல் 2022-ல் குரு பெயர்ச்சி யாகி 6ம் இடமாகிய மீனத்தில் ஆட்சி பலம் பெற்றப்பிறகு கடன், நோய் எதிரி தொல்லை மிகும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். எந்த செயலிலும் முடிவு எடுக்க முடியாமல் தடை, தாமதம், தடுமாற்றம், மன சஞ்சலம், மனக் குழப்பம் உண்டாகும்.

  வெளிநாட்டவர் தொடர்பு ஏற்படும். கடன் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பாக எதிர்பாராத வம்பு, வழக்கு உருவாகும். சிலருக்கு கண் திருஷ்டி, எதிரி தொல்லை உண்டாகும். வீட்டில் வயது முதிர்ந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கும். இளைய சகோதர வழியில் சில ஆதாயங்கள் கிடைக்கப் பெற்றாலும் அவரால் சில மன உளைச்சலும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். முன்னோர் வழி சொத்தின் பங்கீடுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு ஏற்படலாம். சிலருக்கு சொத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் 4--ல் ஆட்சி பலம் பெறுவதால் தொழில் வேலை போன்ற ஜீவன அமைப்புகள் வலிமை பெறும். வாடகை வீட்டிலிருந்தவர்கள் கடன்பட்டாவது சொந்த வீடுகட்டுவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிப்பது, புதிய வாகனம் வாங்குவது என சொத்து தொடர்பான வேலைகள் செய்ய ஏற்ற நேரம். தாய்வழி பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். விற்ற பணத்தில் தாயார் சகோதரருக்கு அதிக பங்கு கொடுப்பது மன உளைச்சலை அதிகமாக்கும். தாயாருக்கு ஆரோக்கிய குறைபாடு சீராகும்.

  சிலருக்கு உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக தாயாரை பிரிந்து செல்ல நேரும். சொத்து வாங்குதல், விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. சிலருக்கு நாய், பூனை, பறவைகள், மீன் என வீட்டு விலங்கு வளர்ப்பில் நாட்டம் உண்டாகும்.

  26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை 2, 7-ம் அதிபதியான செவ்வாய் 4, 5-ம் அதிபதியான சனி பகவானுடன் 4ம் இடத்தில் இணைகிறார்கள். சனி செவ்வாய் பகை கிரகங்கள் என்பதால் தன வரவில் தடை தாமதம் இருக்கும். குடும்ப உறவுகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பேச்சால் குடும்பம் பிரியும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். தெளிந்த நீரோடையாக இருக்கும் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

  கணவன், மனைவி கருத்து வேறுபாடு, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கு மன வேதனை தரும் விதத்தில் இருக்கும் என்பதால் விட்டுக் கொடுத்து வாழப் பழகவும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். சிலருக்கு வீடு, வாகன விற்பனையால் வில்லங்கம் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் தாயை யார் பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசி களுடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். மிகுதியான விரக்தியால் சிலர் தர்ம சிந்தனையை ஒதுக்கி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவார்கள். கலைத் துறையைச் சேர்த்த பெண்களுக்கு வாய்ப்புகள் தடைபடும் அல்லது சம்பளம் கிடைக்க கால தாமதம் உண்டாகும்.

  துலா ராசி ஆண்கள் காதலால் அசிங்கப்படுவர். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். சிலர் குல ஆச்சாரங்கள் மற்றும் விரத நெறிமுறைகளை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவும்.

  ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உண்டாகும். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும்போது நன்மை செய்யுமென்பது ஜோதிட விதி. அதாவது 'கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம்'. வாரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும்.

  கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் 'மெமோ' வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. தடைப்பட்ட வாடகை வருமானம் மீண்டும் வரத் துவங்கும். ஒரு சிலருக்கு 2-வது திருமணம் நடைபெறும்.

  ஏப்ரல் 12-ல் ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் மாறுகிறார்கள். ராசியில் உள்ள கேது உங்களின் செயல்பாடுகள் எண்ணங்களை சுத்தப்படுத்துவார். புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லௌகீக இன்பங்க ளில் ஆர்வம் குறையும். ஆடம்பரத்தில் வாழ்க்கை மனம் வெறுக்கும். ஆனால் ஏழாமிட ராகுவால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் உண்டாகும். தொழில் பங்குதாரர், கூட்டாளிகளை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டிய நேரம். பரம்பரை கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம்

  அல்லது பரம்பரைக் கூட்டுத் தொழில் நிர்வாக கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்து பழியை உங்கள் மேல் திசை திருப்பலாம். தொழில் ஞானம் உழைக்கும் ஆர்வம் நிறைந்த நல்ல பங்குதாரரிடம் பகைமை உண்டாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியான ஒரு புதிய கூட்டாளியை இணைவார். ஆருயிர் நண்பர்களுடன் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரின் குறுக்கீடு இருக்கும்.

  திருமணம்: கோட்சார ராகு/கேதுக்களால் சர்ப்ப தோஷ தாக்கம் உள்ளது. ஜனன கால ஜாதக ரீதியாக குரு தசை நடப்பவர்களைத் தவிர பிறருக்கு கோட்சார ராகு/கேதுக்களால் திருமணம் தடைபடாது.

  மேலும் ராசிக்கு நான்கில் உள்ள சனியின் பத்தாம் பார்வை ராசிக்கு இருப்பதால் வரன் குறித்த தெளிவான முடிவு எடுக்க முடியாமல் நீங்களே நிறைய சிந்தித்து உங்களை குழப்பிக் கொள்வீர்கள். எது எப்படி இருந்தாலும் கோட்சார குரு கும்பத்தில் நிற்பதால் வரன் பற்றிய தெளிவான முடிவு எடுப்பீர்கள்.

  பெண்கள்: ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 2-ல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கும். அதை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும். கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். கணவருக்கு ஆரோக்கிய குறைபாடு இருந்தால் சரியாகும். கணவன், மனைவி உறவு மகிழ்வைத் தரும்.

  விவசாயிகள்: விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர் பார்த்தபடி இருந் தாலும் விரும்பிய விலை படியாது. இந்த ஆண்டு விளைச்சலுக்கு போதிய மழை பெய்யும். பயிர்களை காப்பீடு செய்வதால் அரசின் ஆதாயம் பெற முடியும். விவசாயத்திற்குத் தேவையான தளவா டங்கள் வாங்கலாம். குத்தகைப் பணம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் ஆர்டர்கள் கிடைக்கும். தொழிற்சாலைகள்,சுய தொழில் நடத்துபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.தொழிலுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் மனம் தளரக்கூடாது.தொழில் சிறப்பாக நடக்கும்.வருமானம் வந்து கொண்டே இருக்கும்.கூட்டம் கூடும் ஆனால் கல்லா களைகட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும் கையில் பணம் தங்காது.

  அரசியல்வாதிகள்: தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும்.உங்கள் கனவுகள் நிறைவேறும் ஆனந்தமான நேரம். மக்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கும்.உங்களுக்கு தொல்லை கொடுத்த எதிர் கட்சியினர் விலகிச் செல்வார்கள்.வெளி உலகத்திற்கும்,கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும்.

  மாணவர்கள்: கல்வியில் தடைகள் தகரும்.அரியர்ஸ் பாடங்களை எழுதி பாஸ் பண்ண ஏற்ற நேரம். அரசு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் நாட்டின் சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தாமல் நன்றாக படித்து தேர்வுக்கு தயராகுங்கள்.சரியாக படிப்பு வரவில்லை என்றால் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

  சித்திரை 3, 4-ம்பாதம்: பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம்.

  உஷ்ணநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்யநேரும். மன சஞ்சலத்தை தவிர்க்க 27 வாரம் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.

  சுவாதி: வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டாகும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். இடர்களை தவிர்க்க ஞாயிறு மாலை 4.30- 6 மணி வரையான ராகு வேளையில் 9 நெய் தீபம் ஏற்றி சிவ வழி பாடு செய்யவும்.

  விசாகம் 1,2,3ம் பாதங்கள்: சொத்து வாங்கும் விற்கும் முயற்சியில் அதிக கவனம் தேவை.

  கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு, தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் , விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும்.செவ்வாய்கிழமை வாராஹி அம்மனை வழிபட தொந்தரவுகள் அகலும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×