துலாம் - ஆண்டு பலன் - 2026

2026 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-12-23 17:07 IST   |   Update On 2025-12-23 17:08:00 IST

நியாயமான துலாம் ராசியினரே... நியாயம் தர்மத்தில் நம்பிக்கை நிறைந்த துலாம் ராசியினருக்கு 2026-ம் ஆண்டு நல்ல முன்னேற்ற மான பலன்கள் ஏற்படும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டில் நீங்கள் எண்ணியது ஈடேறும். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். சொல்வாக்கால் மற்றவர்க ளால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள்.

குருவின் சஞ்சார பலன்கள்:

துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 2.6.2026 முதல் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும்.இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். உங்களின் கற்பனைகள் கனவு கள் நனவாகும். இளமை யாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் அரசியல் பிரமுகர் களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. பொரு ளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசேஷங்கள் நடக்கும். மாண வர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும்.தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.

சனியின் சஞ்சார பலன்கள்:

துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் 6ம் மிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும். பணிச் சுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப விசேஷங்கள் நடக்கும்.தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். அதிக வேலைச் பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 6ல் உள்ள சனிபகவான் கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். எனினும் எல்ல விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும்.பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

தற்போது கோட்சாரத்தில் துலாம் ராசிக்கு 5ம்மிடத்தில் ராகுவும் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 5.12.2026 முதல் சுக ஸ்தானத்தில் ராகுவும் தொழில் ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார். பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும்.விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளவது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அரசியல்வாதிகள் மெளனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வம்பு, வழக்குகள் சாதகமாகும்.பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம்.தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

சித்திரை 3,4:

காரிய தடைகள் நீங்கும் வருடம். கிரகங்களின் நிலவரம் சித்திரை நட்சத்திரத்திற்கு மிகச் சாதமாக உள்ளது.கவலைகள் அகலும் உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.பணவரவு திருப்தி தரும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும்.நோய் பாதிப்புகள் குறைய துவங்கும்.இழுபறியான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். விவகாரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது. முருகனை வழிபடுவதால் இன்பங்கள் கூடும்.

சுவாதி:

பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வருடம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் 5ம் இடத்தில் உள்ள கிரகங்கள் மிக நன்மையை செய்யும். அந்த வகையில் தற்போது அதிர்ஷ்டத்தை கூறும் ஐந்தாம் இடத்தில் நட்சத்திரநாதன் ராகு பகவான் நிற்பதால் வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். காலத்தின் அருமை அறிந்து செயல்பட வெற்றி நிச்சயம். ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.

விசாகம் 1, 2, 3:

துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026ம் ஆண்டு தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம், பணிச் சோர்வு அகலும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி.தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும் சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். சிலருக்கு குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியை வழிபட லட்சுமி கடாட்சம் அதிகமாகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News